குழந்தைக்கு பால் கொடுப்பதை அட்டைப்படம் வெளியிட்ட எழுத்தாளர் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு

கேரள பெண் எழுத்தாளர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல வெளியான மலையாள இதழின் அட்டைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் அந்த பத்திரிக்கைக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது மோசமான விளம்பர செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

புத்தகத்திற்கு உள்ளேயே பால் கொடுக்கும் புகைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது.

ஜிலு ஜோசப்

Gilu Joseph breastfeeding her baby on the cover

வைரல் புகைப்படம்

இந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது. பலரும் இந்த அட்டைப்படம் மிகவும் பிடித்து இருக்கிறது என்றார்கள். கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுக்க இந்த படம் வரவேற்பை பெற்றது.

எதிர்ப்பு

அதே சமயத்தில் இதற்க்கு எதிரிப்பு கிளம்பியது. இது மோசமான விளம்பர யுக்தி என்று கூறப்பட்டது. எப்படி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிடலாம் என்று சிலர் கேட்டு இருந்தார்கள்.

jilu joseph pic

எதிராக வழக்கு

தற்போது இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவர் கொல்லம்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு மீது மார்ச் 16 ந்தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.

You may also like...