எங்கிருந்தாலும் வாழ்க! நமீதாவின் திருமண படங்கள்!

நடிகை நமீதாவுக்கும் அவரது காதலரான வீரேந்திர சவுத்ரிக்கும் திருப்பதியில் இன்று திருமணம் நடைபெற்றது.

குஜராத்தில் இருந்து வந்து கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வந்தார் நமீதா. மச்சான்ஸ் மச்சான்ஸ் என்று கொஞ்சிப் பேசி தமிழக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

அண்மை காலமாக வாய்ப்பு இல்லாமல் இருந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மீண்டும் பிரபலமானார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகும் நமீதாவுக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் அவர் தனது காதலரான நடிகர் மல்லிரெட்டி வீரேந்திர சவுத்ரியை திருமணம் செய்ய முடிவு செய்தார்.

திருப்பதியில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் வைத்து நமீதா, வீரேந்திர சவுத்ரியின் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற்றது.

நமீதா, வீரேந்திர சவுத்ரியின் திருமணம் திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணர் கோவிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடந்தது. இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

பிக் பாஸ் வீட்டில் நமீதாவுடன் இருந்த காயத்ரி ரகுராம் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவர் நமீதா மற்றும் வீராவை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 

நமீதாவின் திருமண படங்கள் / Namita Marriage Photo

 

You may also like...