சினிமா நடிகையோடு, ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசம்.. டிவிகளில் வெளியான லீலை காட்சி

பெங்களூர்: நடிகையோடு ஆசிரமத்திற்குள் சாமியார் மகன் உல்லாசமாக இருந்த வீடியோ வெளியாகி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரின் புறநகர் பகுதியான சிக்கஜாலா காவல்துறை எல்லைக்குட்பட்ட இடத்தில் அமைந்துள்ளது முத்தேவனவர வீர சிம்மாசன சம்ஸ்தான் மடம்.

வீர சைவ பிரிவை சேர்ந்த மடம் இது. இந்த மடத்தை, பட்டத பர்வத்ராஜா சிவாச்சாரியா சுவாமி நிர்வகிக்கிறார். அவரது மகன் தயானந்த சுவாமி என்ற குருநாஜேஸ்வராவும் உடனுள்ளார்.

சாமியார் மகன்

இந்த மடத்திற்குள் பெண்களுடன் தயானந்த சுவாமி உல்லாசம் அனுபவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நடிகையொருவருடன் சாமியார் மகன் உல்லாசம் அனுபவிக்கும் காட்சிகள் கன்னட டிவி சேனல்களில் ஒளிபரப்பாகின. இதனால் மக்கள் கடும் ஆத்திரமடைந்தனர்.

மக்கள் கோபம்

இரவு முழுக்க ஆசிரமத்தை முற்றுகையிட்டு, சாமியார்களை ஆசிரமத்தை காலி செய்ய மக்கள் வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தினர். காவல்துறையினர் குவிக்கப்பட்டு நிலைமை கைமீறாமல் தடுக்கப்பட்டது.

மிரட்டல் சதி

நடிகையை சாமியார் மகனுடன் உல்லாசமாக இருக்க வைத்து அந்த வீடியோவை வைத்து பணம் கேட்டு ஒரு கும்பல் மிரட்டியதாகவும், பணம் கிடைக்காததால் டிவி சேனலுக்கு லீக் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை யார்

சாமியார் மகனுடன் உல்லாசமாக இருக்கும் அந்த நடிகை யார் என்பது தெரியாத வண்ணம், முகத்தை ப்ளர் செய்து டிவி சேனல்கள் காண்பித்தன. இருப்பினும், அது கர்நாடகாவை சேர்ந்த நடிகை என்று மட்டும் அவை குறிப்பிட்டன.

நடிகை மறுப்பு

ஆபாச காட்சியிலுள்ள நடிகை கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ள காவ்யா ஆச்சாரியா என்று ஒரு தகவல் பரவியது. ஆனால், அதை நடிகை மறுத்துள்ளார். தனது பெயர் தேவையில்லாமல் இழுக்கப்படுவதாகவும், அதில் உண்மையில்லை என்றும், தனக்கு எந்த சாமியாரையும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

பெங்களூர் அடுத்த பிடதி ஆசிரமத்தில்தான் நித்யானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா நடுவே நெருக்கம் இருந்ததாக முன்பு டிவி சேனல் ஒன்று வீடியோ வெளியிட்டது. அந்த வழக்கு கோர்ட்டில் நிலுவையிலுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...