உலகை ஆட்டி படைக்கும் கிகி சேலஞ்ச் தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது- வீடியோ

KIKIChallenge becomes viral all over the World including Tamilnadu

ஐஸ் பாக்கெட் சேலஞ்ச், மோடியின் பிட்னஸ் சேலஞ்ச் எல்லாம் உலகம் முழுக்க வைரல் ஆனது. முக்கியமாக மோடி லட்சங்களை செலவு செய்து வீடியோ எடுத்த பிட்னஸ் சேலஞ்ச் ஏலியன் லெவல் ஹிட் அடித்தது.

இந்த நிலையில் தற்போது கிகி சேலஞ்ச் (#KIKIChallenge) அல்லது இன் மை பிலிங்ஸ் சேலஞ்ச் (#InMyFeelingsChallenge) எனப்படும் வித்தியாசமான வைரல் சேலஞ்ச் செலவு இல்லாமல் உலகம் முழுக்க பிரபலம் ஆகி இருக்கிறது. பலர் இதற்கு அடிமையாகி கூட இருக்கிறார்கள்.

kikichallenge The Best

”கி கி டூ யு லவ் மீ (kiki do you love me)” என்ற பாடல் பின்பக்கம் ஓட, காரோ, பைக்கோ, ரயிலோ, அதில் இருப்பவர் கீழே இறங்கி, வெளியே சென்று வாகனத்தை துரத்திக் கொண்டே டான்ஸ் ஆட வேண்டும் அதுதான் சேலஞ்ச். கேட்க கொஞ்சம், கஷ்டமாக இருந்தாலும் இந்த சேலஞ்ச் கொஞ்சம் ஜாலியானது, பார்க்கவும் அம்சமாக இருக்கும்.

பாடல் என்ன

கி கி டூ யு லவ் மீ என்ற பாடல் கனடாவை சேர்ந்த டிரேக் என்ற பிரபல ராப் பாடகர் எழுதி வெளியிட்ட பாடல் ஆகும். இந்த பாடலின் பெயர் இன் மை பிலிங்ஸ். இந்த பாடல் வந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டாலும் இப்போதுதான் வைரலாகி உள்ளது. கடந்த ஒரு மாதமாக இந்த பாடலை, கோடி பேர் யூ டியூப்பில் பார்த்து இருக்கிறார்கள். பல தளங்களில் இதை கேட்டு வருகிறார்கள்.

இந்த பாடல் அதுவாக ஒரு ஓரத்தில் யூ டியூப்பில் இருந்தது. ஆனால் பிரபல அமெரிக்க காமெடியன் ஷிக்கி, இந்த பாடலை வைத்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ வெளியிட்டார். அப்போதில் இருந்து இந்த பாடலை வைத்து பலரும் வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.

அதோடு இல்லாமல் உலகில் உள்ள சில பிரபலங்கள் இதை ஏற்றுக்கொண்டு வீடியோ வெளியிட்டார்கள். வில் ஸ்மித், ரெஜினா கெசான்ரா ஆகியோரும் வீடியோ வெளியிட்டனர். இதோ காரில் இருந்து இறங்கி டான்ஸ் ஆடும் தேர்!