பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேசுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! வைரலாகும் வீடியோ

keerthi suresh accident while shooting

தமிழில் ரஜினி முருகன், ரெமோ படங்களில் பேசப்பட்ட கீர்த்தி சுரேஷ், பைரவா படத்தை அடுத்து தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி-2, சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதேபோல் தெலுங்கிலும் அவர் சில மெகா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படம் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடைபெறுகிறது. நவம்பர் முதல் வாரத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டீல் வெளியிடுகிறார்களாம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு அழுத்தமான வேடமாம். குறிப்பாக, இதற்கு முன்பு தெலுங்கில் அவர் நானியுடன் நடித்த நேனு சைலஜா, நேனு லோக்கல் என்ற இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷின் நடிப்பு பேசப்பட்டதை அடுத்து இந்த படத்தில் அவருக்கு இன்னும் வெயிட்டான வேடத்தை கொடுத்துள்ளாராம் திரி விக்ரம்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடும் போது தொப்பென வழுக்கி விழுந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.