நடிகையுடன் மடாதிபதி இருக்கும்அந்தரங்க வீடியோ வெளியாகி பரபரப்பு

Karnataka seer caught in scandal with Kannada actress

பெங்களூருவை சேர்ந்த இளைய மடாதிபதி ஒருவர் கன்னட நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ, சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவை அடுத்துள்ள எலகங்கா அருகே ஹூனசமாரனஹள்ளியில் 500 ஆண்டுகள் பழமையான ஜங்கம்மா மடம் உள்ளது. இதன் மடாதிபதியாக பார்வதராஜா சிவாச்சாரியா சுவாமி இருந்து வருகிறார். இவருக்கு மகன் தயானந்த் சுவாமி மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

பார்வதராஜா சிவாச்சாரியா முதுமை அடைந்ததால் அடுத்த மடாதிபதியாக தயானந்த் சுவாமி நியமிக்கப்பட இருப்பதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. ஆனால் ரியஸ் எஸ்டேட் நிறுவனம் தொடங்கி மடத்தின் நிலத்தையும் விற்பனை செய்த தயானந்த் சுவாமியை அடுத்த மடாதிபதியாக நியமிக்கக் கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் இளம் பெண் ஒருவருடன் தயானந்த் சுவாமி நெருக்கமாக இருக்கும் அந்தரங்க வீடியோ காட்சி சமூக வலைதளங்களிலும், கன்னட சேனல்களிலும் வெளியானது. மேலும் அந்தப் பெண் கன்னட திரைப்படங்கள் சிலவற்றில் நடித்திருப்பவர் என்றும் தகவல் வெளியானது.

இதனால் கர்நாடகாவில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தயானந்த் சுவாமிக்கு எதிராக நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஜங்கம்மா மடத்தை முற்றுகையிட்டனர். தயானந்த் சுவாமிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய பக்தர்கள், அவரது உருவப் படத்தையும் எரித்தனர்.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது பக்தர்களோ புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த வீடியோ கிராஃபிக்ஸ் செய்யப்பட்டது என தயானந்த் சுவாமியின் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.