ஆர்யாவை திருமணம் செய்ய விருப்பமா?: 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யுங்க

Girls, Do you want to marry the fitness freak Arya?. Then take you phone and dial 73301-73301

கோலிவுட்டில் ரொம்ம்ம்ம்ம்ப காலமாக சிங்கிளாக சுற்றுகிறார்கள் ஆர்யாவும், விஷாலும். இருவருக்கும் எப்பொழுது திருமணம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆர்யா அமலா பாலுக்கு ப்ரொபோஸ் பண்ண அவர் நைசாக நழுவிவிட்டார்.

ஆர்யா தனது திருமணம் குறித்து ஜிம்மில் பேசிய வீடியோ வெளியானது. ஆர்யாவுக்கு வீட்டில் பெண் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

ஜிம்மில் பேசிய வீடியோ லீக்கானது. ஆனால் அதில் பேசியவை உண்மை தான். என் திருமணத்திற்கு பெண் தேடுகிறேன். எந்த நிபந்தனையும் இல்லை. விருப்பம் உள்ளவர்கள் 73301-73301 என்ற எண்ணுக்கு போன் செய்யலாம் என்று கூறி ஆர்யா வீடியோ ஒன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

ஆர்யாவின் வீடியோவை பார்த்த நாங்கள் அது உண்மையா இல்லை ஏதாவது பப்ளிசிட்டி ஸ்டண்டா என்று தெரிந்து கொள்ள அவர் கொடுத்த எண்ணுக்கு போன் செய்தால் ஆர்யாவின் குரல் கேட்டது. ஆனால் அது பதிவு செய்யப்பட்ட ஒன்று.

என்னை தொடர்பு கொண்டதற்கு நன்றி. உங்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். வந்திருக்கும். அதில் உள்ள இணைப்பை க்ளிக் செய்து உங்களின் விபரங்களை பூர்த்தி செய்து அனுப்புங்கள். நாம் சந்திக்கலாம் என்று ஆர்யாவின் குரல் ஒலித்தது.

எஸ்.எம்.எஸ்.ஸில் வந்த லிங்கை க்ளிக் செய்தால் அதில் நம் பெயர், வயது, முகவரி, பாஸ்போர்ட் எண், பாஸ்போர்ட் முடியும் தேதி, தாய் மொழி உள்ளிட்ட விபரங்களை கேட்கிறார்கள். மேலும் 1 நிமிட வீடியோவையும் அப்லோடு செய்ய கேட்கிறார்கள். நல்லா இருக்கு ஆர்யா, நல்லா வருவீங்க பாஸு.

You may also like...