சென்னையில் கணவன் மனைவி போல வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம்!

தலைநகர் சென்னையில் விபச்சார தொழில் நாளுக்கு நாள் அதிகாரித்து வருகிறது. இதனை தடுக்க போலீசாரும் பல்வேறு நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றனர். ஆனால் புது புது டெக்னிக்களில் விபாசர தொழில் மட்டும் கொடி கட்டி பறக்கிறது.

அந்த வகையில் தற்போது சென்னையில் புது டெக்னிக்கை பயன்படுத்தி புரோக்கர்கள் விபாச்சார தொழிலை செய்து வருகின்றனர்.

அதன்படி கணவன் மனைவி போல சில குறிப்பிட்ட ஜோடிகள் வீடு வாடகைக்கு எடுக்கின்றனர்.

அங்கு வெளிமாநில பெண்களை வைத்து விபச்சார தொழிலை செய்து வருகின்றனர்.

அது போல தாம்பரம் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் அதிக அளவில் ஆண்கள் வந்து போவதால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

இதனை தொடர்ந்து அங்கு தனிப்படை போலீசார் சோதனை நடத்தியபோது விபாச்சாரம் நடப்பது தெரியவந்தது.

அங்கு மும்பையை சேர்ந்த விபச்சார அழகிகளை மீட்டனர். விபசார கும்பல் தலைவன்  தப்பி ஓடி விட்டான்.

இது போல சென்னையின் பல இடங்களில் இதே டெக்னிக்கை பயன்படுத்தி விபச்சார தொழில் கொடி கட்டி பறப்பதாக தெரியவந்துள்ளது. அவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 

You may also like...