தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ


மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள மான்ரோ நகரை சேர்ந்தவர் மாரா மார்ட்டின். மாடல் அழகியான அவருக்கு அரியா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது. மயாமி நகரில் நடந்த ஸ்விம்சூட்(நீச்சல் உடை) ஃபேஷன்ஷோவில் மாரா கலந்து கொண்டார்.

மாரா தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். மயாமி ஸ்விம் வீக் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஷோவில் மாரா தங்க நிற பிகினி அணிந்திருந்தார்.

மாரா தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே ராம்ப்வாக் செய்ததை பார்த்த பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாராவின் செயல் இருந்ததாக பலரும் பாராட்டியுள்ளனர்.

மாரா மார்டிட்ன் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வேலை செய்யும்போது தாய்ப்பால் கொடுத்த மாராவை பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.