இன்டர்நெட்’யில் கசிந்த அனுயாவின் ஆபாசப்படம்… நீக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

Actress Anuya Photo Leaked On Internet

இணையத்தில் கசிந்த அனுயாவின் ஆபாசப்படம்… நீக்கக் கோரி கமிஷனர் அலுவலகத்தில் புகார்!

பிரபல நடிகை அனுயாவின் ஆபாசப் படம் என ஒன்றை ட்விட்டரில் பரவவிட்டுள்ளனர். இதனை நீக்கக் கோரி அனுயா சைபர் க்ரைமில் புகார் செய்துள்ளார்.

நடிகைகளின் ஆபாச, நிர்வாணப் படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்புவது வழக்கம். இவற்றில் சில உண்மையாக இருக்கும். பல மார்ப்பிங் செய்யப்பட்டவையாக இருக்கும்.

சில மாதங்களுக்கு முன்பு சுசி லீக்ஸ் என்ற பெயரில் நடிகை சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்ட பலரது ஆபாசப் படங்கள் வெளியாகி, பின் நீக்கப்பட்டன.

சிவா மனசுல சக்தி, நண்பன் உள்ளிட்ட தமிழ் படங்கள், மற்றும் சமீபத்தில் பிக்பாஸில் நடித்த நடிகை அனுயாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச படமும் பரவியது.

இந்தப் படத்தை டிவிட்டரில் இருந்து நீக்குமாறு சைபர் கிரைம் போலீசில் புகார் மனு அளித்துள்ளார்.

இது குறித்து நடிகை அனுயா பாந்திராவில் உள்ள சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள புகாரில், “சமூகவலை தளத்தில் மார்பிங் செய்யப்பட்ட எனது ஆபாச படம் பரவி வருகிறது. இது எனது புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே அந்த ஆபாச படத்தை டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கூறிஉள்ளார்.

You may also like...