முகமது ஷமியின் தம்பி தன்னை வன்புணர்வு செய்ததாக ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பரபரப்பு புகார்

Hasin Jahan: Mohammed Shami wanted me to have physical relations with his brother

முகமது ஷமியின் தம்பி தன்னை வன்புணர்வு செய்ததாக ஷமியின் மனைவி ஹசின் ஜகான் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
Hasin Jahan Mohammed Shami wanted me to have physical relations with his brother

ஷமி தன்னை கொல்ல முயன்றதாக கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஷமி மறுத்துள்ளார். மனைவிக்கு மனநலம் சரியில்லை என்றுள்ளார். முகமது ஷமி மீது ஏற்கனவே அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பெயிலில் வர முடியாத வகையில் அவர் மீது வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.

தொடக்க புகார்கள் எல்லாமே ஷமிக்கும், அவருக்கும் இருக்கும் உறவு குறித்து மட்டுமே இருந்தது. ஷமி நிறைய பெண்களுடன் தொடர்பில் இருக்கிறார் என்று குறிப்பிட்டார். மேலும் நிறைய பாலியல் தொழிலாளிகளை தேடி தேடி செல்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

அதற்கு அடுத்த படியாக ஷமி மீது கிரிக்கெட் ரீதியாக புகார் வைத்தார். அதன்படி பாகிஸ்தான் பெண்ணுடன் சேர்ந்து ஷமி மேட்ச் பிக்சிங் செய்தார் என்று குறிப்பிட்டார். இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று பகீர் கிளப்பினார்.

பாலியல் உறவு கொள்ள வறுபுறுத்தினார்

தற்போது புதிதாக ஷமி, அவருடைய தம்பி ஹாசிப் அஹமதுவுடன் தன்னை பாலியல் உறவு செய்ய வற்புறுத்தியதாக கூறியுள்ளார். ஷமி ஒருநாள் ஹாசிப்புடன் அறைக்குள் தள்ளி பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தியதாக ஷமி மனைவி புகார் அளித்துள்ளார். ஹாசிப் அப்போது தவறாக நடந்து கொள்ள முயன்றதாக இவர் கூறியுள்ளார்.

மேலும் ஹாசிப் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார் என்றும் கூறியுள்ளார். அதன்படி ஷமி வெளிநாடு சென்ற போது ஹாசிப் தன்னை பாலியல் வன்புணர்வு செய்தார். கொடுமைகள் படுத்தினார், இது ஷமிக்கும் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.