நடிகையின் ஆபாச வீடியோவை யூடியூப்பில் வெளியிட்ட தயாரிப்பாளர்

நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர் கைது!

நடிகையின் ஆபாச வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளரை போலீசார் கைது செய்துள்ளனர். போஜ்புரி படங்களை தயாரித்து வருபவர் உபேந்திரகுமார் வர்மா(29).

அவர் 28 வயது நடிகையை வைத்து குறும்படம் ஒன்றை தயாரித்துள்ளார். அந்த குறும்படத்தை மூன்று நாட்களில் படமாக்கியுள்ளார். மும்பை வெர்சோவா பகுதியில் உள்ள வர்மாவின் அலுவலகத்தில் வைத்து தான் குறும்பட்டத்தை எடுத்துள்ளனர்.

நடிகை துண்டு மட்டும் கட்டிக் கொண்டு வரும் காட்சி ஒன்றை படமாக்கியுள்ளனர். நடிகையும் சம்மதித்து நடித்துள்ளார். ஆனால் அவர் எதிர்பாராவிதமாக துண்டு அவிழ்ந்து விழுந்துவிட்டது.

நடிகையின் துண்டு அவிழ்ந்து விழுந்தது கேமராவில் பதிவாகிவிட்டது. இதை பார்த்த நடிகையோ அந்த காட்சியை வீடியோவில் இருந்து நீக்கிவிடுமாறு வர்மாவிடம் கேட்டுள்ளார்.

துண்டு அவிழ்ந்து விழுந்த காட்சியை நீக்கிவிடுவதாக வர்மாவும் அந்த நடிகைக்கு சத்தியம் செய்துள்ளார். ஆனால் அவர் அந்த காட்சியை யூடியூப்பில் வெளியிட்டுவிட்டார். அந்த காட்சி வெளியான வேகத்தில் அதை ஆயிரக்கணக்கானோர் பார்த்துவிட்டனர்.

பின்னர் அந்த துண்டு காட்சி பல ஆபாச இணையதளங்களில் வைரலானது. அந்த காட்சியை பார்த்த நடிகையின் தோழிகள் அதிர்ச்சி அடைந்து அவருக்கு தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அவர் வர்மா மீது கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி போலீசில் புகார் அளித்தார். 2 மாதங்களாக தலைமறைவாக இருந்த வர்மாவை அவரின் உறவினரின் சலூனில் வைத்து போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

You may also like...