என் மனைவி விலைமாதுவாக வேலை செய்து வருகிறார் | My Story

எனக்கு 43 வயதாகிறது, என் மனைவிக்கு 40 வயதாகிறது. எங்கள் இருவருக்கும் கடந்த பத்து வருடங்களுக்கு முன் திருமணமானது. எங்களை சுற்றி இருக்கும் பலருக்கும் நாங்கள் இந்த உலகின் ஒரு அரிதான தம்பதி என தெரியாது.
bed room

ஆம்! எந்த ஒரு கணவனும் தன் மனைவியை இப்படி ஒரு வேலை செய்ய அனுமதிக்க மாட்டான். ஆனால், சந்தர்ப்ப, சூழ்நிலை காரணமாக என் மனைவி விலைமாதுவாக வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானாள். அதை நானும் ஏற்றுக் கொண்டேன்.

நானும் என் மனைவியும் முப்பது வருடங்களுக்கு முதல் முறையாக சந்தித்துக் கொண்டோம். நாங்கள் இருவரும் கடந்த 18 வருடங்களாக ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறோம். ஆனால், சரியாக கூற வேண்டும் என்றால் 11 வருடங்களுக்கு முன் தான் நாங்கள் திருமணம் செய்துக் கொண்டோம்.

நாங்கள் முதல் முறை சந்தித்துக் கொண்ட போது எப்படியாக உணர்ந்தோமோ, அதே உணர்வோடும், மகிழ்ச்சியோடும் தான் இப்போதும் வாழ்ந்து வருகிறோம்.

என் மனைவி கடந்த 20 வருடங்களாக விலைமாதுவாக தான் பணிபுரிந்து வருகிறார். நான் அவருடன் இணையும் முன்னிருந்தே இதை அறிவேன். எங்கள் இருவருக்குமே உறவு என்று யாருமில்லை.
girl smoking
படிப்பும் பெரிதாக இல்லை. கிடைத்த வேலையை செய்துக் கொண்டு, பாக்கெட்டில் தங்கும் காசுக்கு ஏற்ற உணவு சாப்பிட்டுக் கொண்டு வாழ்க்கையை நகர்த்தி வந்தோம். சில சமயங்களில் அன்னதானங்களும், பல சமயம் கார்ப்பரேஷன் குடிநீரும் தான் எங்கள் காலை, மதிய, உறவு உணவு எல்லாமே.

ஒரு நாள் என் மனைவிக்கு (அப்போது நாங்கள் நண்பர்கள்) ஒருவர் வேலை தேடிக் கொடுத்து உதவுவதாக கூறினார். ஆனால், அவர் அழைத்து சென்ற இடம் ஒரு விபச்சார விடுதி. முதலில் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு பக்கம் கோபம், ஒரு பக்கம் எங்கள் ஏழ்மையுடன் அவர் விளையாடுகிறாரோ என்ற வருத்தம். ஆனால், அவர் உண்மையிலேயே அவளுக்கு உதவி தான் செய்தார். அந்த விடுதியில் சுத்தம் செய்யும் வேலையும், யாரேனும் வந்தால் அவர்களை காக்க வைக்கும் வேலையும் கொடுக்கப்பட்டது.

அவள் அங்கேயே தங்கிக்கொள்ள இடம் கொடுத்தனர். உணவும் இலவசமாக வந்துவிடும். ஓரிரு ஆண்டுகள் எங்கள் பசியும், துக்கமும் காணாமல் போனது. மூன்று வேளை எங்கள் உணவும், தங்க இடமும் என கொஞ்சம் சௌகரியமாக தான் இருந்தோம். ஆயினும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு என்ன செய்வது என்ற கேள்வியும், பொருளாதார தடையும் எங்கள் இருவரையும் அதே இடத்தில் நிறுத்திவிட்டது.

அவளுக்காவது மாத வருமானத்தில் ஒரு வேலை இருந்தது. ஆனால், நான் அப்போதும் அந்தந்த நாள் கிடைக்கும் வேலை செய்துக் கொண்டு, சிறிதளவில் அவர்கள் கொடுக்கும் பணத்தை சேமித்துக் கொண்டு இருந்தேன். ஒரு கட்டத்தில் நாங்கள் இருவரும் ஊருக்கு வெளியே ஒரு சிறிய வீடு எடுத்து ஒன்றாக தங்க துவங்கினோம். அப்போது எங்கள் இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை.

குறைந்தபட்சம் சாலையோரத்தில் ஏதேனும் கடை போட்டு பிழைத்துக் கொள்ளலாம் என்றாலும் கூட அதை துவங்க எங்களிடம் பணமும் இல்லை, எங்களை நம்பி கடன் கொடுக்கவும் ஆளில்லை. நாங்கள் இருவரும் சேர்ந்து சம்பாதித்து வந்த மாத வருமானமே 6 ஆயிரம் ரூபாய் தான். அதுவும் அனைத்து மாதங்களும் இப்படியே இருக்காது. அதில் வளது மாத சம்பளம் நான்காயிரம் மட்டும் தான் நிலையானது. எனக்கு அவ்வப்போது கிடைக்கும் வேலையில் ஐம்பது, நூறு கிடைக்கும். அதில் ஒரு மாதம் ஆயிரம், சில மாதம் இரண்டாயிரம் வரை கிடைக்கும். இது எங்கள் வீட்டு வாடகை, உணவுக்கே போதா குறையாக இருந்தது.
Chennai prostitution 
ஒரு நாள் என் மனைவி வேலை செய்து வந்த விடுதியில், ஒரு கஸ்டமரால் அதிக நேரம் காத்திருக்க முடியவில்லை. இவ (என் மனைவி) சும்மா தானே இருக்கா, இவள அனுப்பு என்று கூறி, வலுக்கட்டாயமாக இழுத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார். அதில் உடல் அளவிலும், மனதளவிலும் அவள் மிகவும் பாதிக்கப்பட்டாள்.

அவள் உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் அந்த விடுதியின் ஓனர் எங்களிடம் குறிப்பிட்ட தொகையை கொடுத்து சிகிச்சை எடுத்துக் கொள்ள கூறினார்கள். அது சிகிச்சைக்கு தேவைப்படும் பணத்திற்கும் மேலாக இருந்தது. ஓரிரு மாதங்கள் அவள் வேலைக்கு செல்லாமலேயே ஊதியம் மாதம், மாதம் எங்களுக்கு கொடுத்து உதவினார் அந்த விடுதி ஓனர்.

மீண்டும் அந்த விடுதிக்கு வேலைக்கு செல்ல வேண்டாம் என்ற எண்ணம் இருந்தாலும், அந்த வேலையை விட்டால், நாங்கள் மீண்டும் நடுதெருவுக்கு தான் செல்ல வேண்டும் என்ற நிலை. மேலும், அந்த விடுதி ஓனர் எங்களுக்கு செய்த உதவி காரணமாக, ஓரிரு மாதங்கள் கழித்து என் மனைவி அந்த விடுதிக்கே மீண்டும் வேலைக்கு செல்ல துவங்கினாள்.

திருமணம் அவசியமல்ல! பலருடன் சேர்ந்து வாழலாம்! இந்தியாவில் உள்ள கிரமம்

சுவை கண்ட பூனை விடாது என்பது போல, என்னவள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். பலமுறை இதுகுறித்து அவள் என்னிடம் கூறாமல் மறைத்திவிட்டாள். எங்கள் ஏழ்மை, அவர்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற தைரியத்தை கொடுத்திருந்தது. நானும் அவளிடம் எப்படியேனும் நமக்கு சிறிதளவு பணம் கிடைத்தால் சிறியதாக சாலையோரத்தில் ஒரு கடைப்போட்டு நிம்மதியான வாழ்க்கை வாழலாம் என்று அவளிடம் புலம்பி வந்தேன். எங்கள் தேவை பணம், எங்களுக்கு வேறு வேலை தரவோ, அதிக ஊதியம் தரவோ யாரும் முன்வரவில்லை. எங்கள் வாழ்க்கை மாற்றத்திற்காக என்னிடம் கூறாமலே சில மாதங்கள் விலை மாதுவாக வேலை செய்து வந்தாள்.

ஒரு நாள் என்னிடம் கடை போடுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்றால். ஐம்பது முதல் அறுபது ஆயிரம் வரை தேவைப்படும் என்றேன். இதோ என்னிடம் இருக்கிறது. நாம் இங்கே இருந்து வேறு இடத்திற்கு சென்று விடலாம். நமது புதிய வாழ்க்கையை துவக்கலாம் என்றாள். அப்போது தான், அவள் சம்பாதித்த விதமும், அவள் எங்கள் வாழ்க்கைக்காக கடந்து வந்த கொடுமையும் அறிந்தேன்.

அன்றைய தினம் மாலை தான் எங்கள் திருமணமும் நடந்தது.

அன்று இரவே பக்கத்து ஊருக்கு சென்றோம். என் கையில் இருந்த சேமிப்பு மற்றும் அவள் கொண்டுவந்த பணம் போட்டு, ஒரு தள்ளு வண்டி மற்றும் டிப்பன் கடைக்கு தேவையான பொருட்கள் எல்லாம் வாங்கி எங்கள் புதிய வாழ்க்கை பயணத்தை துவக்கினோம்.

சில மாதங்கள் எங்கள் வாழ்க்கை நன்றாக தான் சென்றது. இரண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும், அவர்களை நன்கு படிக்க வைக்க வேண்டும், நாங்கள் எதிர்கொண்ட எந்த ஒரு துயரமும் அவர்கள் கனவிலும் வந்துவிட கூடாது என்று பல திட்டங்கள் போட்டோம். எங்கள் தள்ளு வண்டி டிப்பன் கடையும் வியாபாரம் சூடு பிடிக்க துவங்கியது.

கருவுற்றாள்… எங்களுக்கு ஒரு தேவதை பிறந்தாள். அவளை இங்கு தான் படிக்க வைக்க வேண்டும், இதை எல்லாம் கற்பிக்க வேண்டும் என்று பல திட்டங்கள். அச்சு அசல் என் மனைவி போலவே முக ஜாடை கொண்டிருந்தாள்.

அவளை தேவதை என்றே அழைத்து வந்தோம். அவளது பெயரும் ஏஞ்சல் தான். மாதம் பத்தாயிரம் வருமானம் வந்துக் கொண்டிருந்த காலம் அது, அதை எப்படி உயர்த்துவது, உடன் வேறு ஏதாவது வேலை செய்யலாமா? என்று பல எண்ணங்கள். அப்போது… மீண்டும் எங்கள் வாழ்க்கை பின்னோக்கி நகரும் என்று கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

ஒரு நாள் இரவு ஏற்பட்ட சாலை விபத்தில் எங்கள் கடையுடன் சேர்ந்து எனது கால்களும் முடமானது. நாங்கள் ஒன்றரை வருட காலமாக எதிர்காலத்திற்கு சேமித்து வைத்திருந்த பணம் முழுக்க எனது சிகிச்சைக்கு செலவானது. அதற்கு பின்னரும் கூட அடிக்கடி மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலைமை. எத்தனையோ முயற்சித்தும் எங்களுக்கு பணவுதவி எங்கிருந்தும் கிடைக்கவில்லை.

வேறு வெளியின்றி மீண்டும் விலைமாதுவாக செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டாள் என் மனைவி. ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் கண்மூடி திறப்பது போல உருண்டோடிவிட்டது.

ஆனால், எங்கள் வாழ்க்கை நிலை மட்டும் மாறவில்லை. என் மருத்துவ செலவு, மகளின் படிப்பு செலவு என மாதாமாதம் தேவை மட்டும் அதிகரிக்கிறது. வாழ்க்கை நிலையோ முன்னேற்றம் அடையாமல் தடைப்பட்டு அதே பள்ளத்தில் விழுந்து கிடக்கிறது. ஏழையாக பிறப்பது தவறில்லை, ஏழையாக மடிவது தான் தவறு என்கிறார்கள். நிச்சயம் ஏழையாக மடிய மாட்டோம்.

எங்கள் வாழ்வில் ஒரு திருப்பம் உண்டாகும், எங்களுக்கான வாய்ப்பை நாங்களே உருவாக்கிக் கொள்வோம். அதில் எங்கள் இருவருக்குமே அதீத நம்பிக்கை உண்டு.