delhi

விரைவில் இந்திய வருகிறது வியட்நாமின் கவர்ச்சி விமானசேவை

சர்ச்சைக்குப் பேர் போன வியட்நாமின் வியட்ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜூலை மாதம் முதல் ஹோ ச்ஹி மின்ஹ்-ல் இருந்து இந்திய தலைநகரான டெல்லிக்கு நேரடி விமான ஒன்றை இயக்க உள்ளது. இதில் என்ன சர்ச்சை என்றால் வியட்ஜெட் ஏர்லைன்ஸில் பணிபுரியும் பெண்கள் பிக்னி அணிவது ஆகும்.

2012-ம் ஆண்டுத் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் அப்போது ஆண்டுக் காலண்டரினை பிக்னி பெண்கள் உடன் வெளியிட்டு மிகப் பெரிய சர்ச்சையினை ஏற்படுத்தியது. விஜய் மல்லையாவுக்குப் போட்டியா என்று நினைக்க வேண்டாம். இந்த நிறுவனத்தினைத் துவங்கியது வியட்நாமை சேர்ந்த நக்யுயென் தி புயோங் தாவோ என்ற பெண்மணி ஆவார்.

தற்போது நக்யுயென் தி புயோங் தாவோ தான் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரர் ஆவார். வியட் ஜெட் என்ற பயணைகள் விமானச் சேவை அளித்து வரும் இவருடைய சிறிது வித்தியாசமானது.

வியட் ஜெட் நிறுவனத்தின் பங்குகளில் 95 சதவீதம் தவோவொடம் உள்ளது, இதனால் தான் இவர் வியட்நாமின் முதல் பெண் கோடிஸ்வரை பெயர் எடுக்கக் காரணமாகவும் உள்ளது. அதுமட்டும் இல்லாமல் இவரிடம் டிராகன் சிட்டி எனப்படும் 65 ஹ்க்டேர் நிலப்பரப்புக் கொண்ட இடத்தில் வியட்நாமிற்கான வளர்ச்சி பணிகளும் செய்து வருகின்றார்.

வியட் ஜெட் விமான நிறுவனம் தான் வியட்நாமின் ஒரே ஒரு தனியார் விமானப் போக்குவரத்து சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் விரைவில் முதலீட்டிற்காகப் பங்குச் சந்தையிலும் இறங்க இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்டதை அடுத்து தாவோ 1.37 பில்லியன் டாலருக்குச் சொந்தக்காரியாகி இருக்கின்றார்.

இன்னும் ஒன்று இரண்டு மாதங்களில் பங்குச் சந்தை மூலமாக முதலீடுகளைப் பெற இருக்கின்றது வியட் ஜெட்.
தாவோவை பொருத்த வரை பிக்னி அல்லது பாரம்பரிய உடை எது அணிய வேண்டும் என்பது சொந்த விருப்பத்தை என்று கூருபவர் ஆவார்.

விமானப் பணிப்பெண்களே இந்த நிறுவனத்தின் காலெண்டர் மாடல்களாகவும் உள்ளனர்.

பிக்னி உடை அணிந்த பணிப் பெண்களால் வியாட்நாமின் மொத்த போக்குவரத்து சேவையில் வியாட் ஜெட் 30 சதவீதத்தைத் தன்வசம் வைத்துள்ளது. விரைவில் இது வியாட்நாமின் தேசிய விமானப் போக்குவரத்து நிறுவனமான வியட்நாம் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளிவிடும் என்றும் கூறப்படுகின்றது.

விமானப் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள் பிக்னியுடன் உள்ளது பற்றி எங்களுக்குக் கவலை கிடையாது என்றும் எங்களைப் பொருத்த வரை மக்கள் மக்களின் மகிழ்ச்சி தான் எங்களது மகிழ்ச்சியும் கூட என்கிறார் தாவோ.

வியட் ஜெட் பணிப்பெண்களில் பிக்னியில் உள்ளவர்கள் அனைவரும் மிகவும் இளமையானவர்கள் என்றும், அவர்கள் படங்கள் தான் அனைத்து விளம்பரப் பலகைகளில் பயன்படுத்தப்படுகின்றது என்றும் துவக்க விழாவின் புகைப்படங்களிலும் அவர்கள் தான் இடம்பெற்றனர் என்றும் கூறப்படுகின்றது. மேலும் பிக்னி உடை அணிவது எங்களது பழமையான கலாச்சாரத்தைக் காட்டுகின்றது என்றும் தாவோ கூறினார்.

டெல்லி – ஆக்ரா சாலையில் 18க்கும் மேற்பட்ட வாகனங்கள் மோதி விபத்து- வைரல் வீடியோ!

Madness in Delhi due to drivers who drive at full speed in fog conditions

டெல்லி – ஆக்ரா இடையேயான யமுனா எக்ஸ்பிரஸ் சாலையில் பனிமூட்டம் காரணமாக கார்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. தீபாவளிக்குப் பிறகு டெல்லியின் காற்றில் உள்ள மாசின் அளவு அதிக அளவு இருந்ததாக ஆய்வில் தெரிய வந்தது.

இன்று அதிகாலை 6 மணியளவில் டெல்லி சாலைகளில் பனி மற்றும் காற்று மாசுபாடு காரணமாக கடுமையான புகை மூட்டம் நிலவியது. சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மக்கள் சுவாசிக்க முடியாமல் சிரமப்பட்டனர்.

இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. சாலைகள் சரியாகத் தெரியாததால் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். இன்று அதிகாலை டெல்லி – ஆக்ரா சாலையான யமுனா எக்ஸ்பிரஸ் சாலை பனிமூட்டத்தால் சூழப்பட்டது. நொய்டா அருகே இருக்கும் தன்கவுர் என்கிற இடத்தில் உயர்மட்ட பாலம் கட்டுமானப்பணி நடப்பதால், சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்தன. அதையும் தாண்டி அங்கு நிலவிய காற்று மாசுபாட்டுடன் கூடிய பனிப்புகையால் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன.

இதில் ஆக்ரா நோக்கி சென்றுகொண்டிருந்த ஆறு கார்களும், டெல்லி நோக்கி வந்து கொண்டிருந்த எட்டு கார்களும் ஒன்றின் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. இந்த வீடியோ வெளியாகி உள்ளது. இடைவெளி இல்லாமல் வேகமாக வந்து வாகனங்கள் மோதுவது காண்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து தன்கவுர் காவல் நிலைய அதிகாரியிடம் கேட்டபோது, ‘டெல்லியில் திடீரென ஏற்பட்ட பனிமூட்டம் நண்பகல் தாண்டியும் விலகாமல் இருக்கிறது. சாலையில் தடுப்புகள் வைக்கப்பட்டு இருந்து எச்சரிக்கை விளக்குகள் எரியவிடப்பட்ட போதிலும் வாகனங்கள் பார்வை குறைபாட்டால் வாகனங்கள் மோதி உள்ளன. இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை என்றும், வாகனங்கள் மட்டுமே சேதமடைந்தன என்றும் அவர் தெரிவித்தார்.

ஏர்போர்ட்டில் பயணியை தாக்கிய இன்டிகோ ஊழியர்கள்- வீடியோ

Indigo apologies for inhumane behavior of its staff

விமான பயணி ஒருவரை இண்டிகோ ஊழியர்கள் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் நேற்று வைரலானது. இதுகுறித்து மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் இண்டிகோ நிறுவனத்திடம் விளக்கம் கேட்டு உள்ளார்.

டெல்லி விமான நிலையத்தில் பயணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இண்டிகோ விமான ஊழியர்கள் பயணியைத் தாக்கி கீழே விழச் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இதில் ஊழியர்களின் முரட்டுத்தனத்தை பலரும் கண்டித்து பதிவு செய்து இருந்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட அந்தப்பயணி ராஜூவ் கட்டியால் என்பதும், காலை விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி சென்றவர் என்பதும் தெரியவந்தது.டெல்லி விமானத்தை விட்டு இறங்கிய அவர் ஊழியர்களிடம் ஏதோ பேச, அதற்கு இரண்டு ஊழியர்கள் அவரைத் தாக்கி தரையில் விழ வைத்தனர்.

இந்த சம்பவத்தைக் கேள்விப்பட்ட மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ,இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு கண்டனம் தெரிவித்தும், மத்திய விமான போக்குவரத்து இயக்ககத்திடம் இருந்து விளக்கமும் கேட்டு இருக்கிறார். இதுகுறித்து விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இண்டிகோ விமான நிறுவனம் மன்னிப்பு கோரி உள்ளது. அதில் தங்களுக்கு வாடிக்கையாளர்களின் மாண்பும், மரியாதையும் மிக முக்கியம் என்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பணியாளர்களை பணிநீக்கம் செய்தும் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், தாக்குதலுக்குள்ளான பயணி ராஜூவ் கட்டியாலிடம் தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கோரி இருக்கிறார் இண்டிகோ விமான சேவை நிறுவனத்தின் தலைவர் ஆதித்யா கோஷ். இந்த சம்பவத்திற்கு வருந்துவதாகவும், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.

கடந்த வாரத்தில் ஹைதராபாத்தில் இருந்து மும்பைக்கு செல்லும் விமானத்தில் அஜிடேஷ் என்கிற இண்டிகோ விமான நிறுவன ஊழியர் தன்னிடம் மோசமாக நடந்து கொண்டதாக ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ட்விட்டரில் தெரிவித்து இருந்தார். இப்படி பணியாளர்களால் தொடர்ந்து இண்டிகோ நிறுவனம் அவப்பெயரைச் சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.