வலி

12 வயதில் கடத்தப்பட்டேன் வாரத்துக்கு நான்கு தடவை! சிறுமியின் 5 ஆண்டு நரகம்

சிறுமியர், இளம் பெண்கள் என உலகம் முழுவதும் பெண்களை கடத்தி விற்கும் சம்பவங்கள் இன்றும் பல இடங்களில் நடந்துக் கொண்டு தான் இருக்கிறது. வளர்ந்த நாடு, வளரும் நாடு, வறுமை நாடு என எந்த பேதமும் இன்றி இந்த கடத்தல் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

இது போன்ற கடத்தலில் சிக்கி தங்கள் வாழ்வையும், உயிரையும் இழக்கும் நபர்களின் எண்ணிக்கை எண்ணிலடங்காதது. பெரும்பாலும் இப்படி கடத்தப்படும் பெண்கள் பெரும் பணக்காரர்களின் செக்ஸ் பசிக்கும், பாலியல் தொழில் நடக்கும் இடங்களுக்கும் தான் விற்கப்படுகிறார்கள்.

இப்படி ஒரு சம்பவத்தில் சிக்கி தனது வாழ்வை தொலைத்த 12 வயது சிறுமியின் கதை தான் இது…

அப்போது என் வயது 12. அன்றிலிருந்து ஐந்தாண்டுகள் அதாவது 17வயது வரை என்னை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்தனர்.

எனக்கு நன்கு நினைவிருக்கிறது. என் வீட்டருகே இருந்த பூங்கா ஒன்றில் விளையாடிக் கொண்டிருந்தேன். அன்று எனது 12வயது பிறந்தநாள். நான் என் வாழ்வில் கொண்டாடிய கடைசி பிறந்தநாளும் அதுதான்.

விளையாடிக் கொண்டிருந்த எனக்கு என்ன ஆனது என நினைவில்லை. கண்விழித்து பார்த்த போது ஒரு டிரக்கில் இருந்தேன். என் கண்கள், கைகள் மற்றும் கால்கள் கட்டப்பட்டிருந்தது. என் வாயை திறக்க முடியாதபடி துணி வைத்து அடைத்திருந்தனர். வேகமாக நகர்ந்துக் கொண்டிருந்த அந்த வாகனத்தில் என்னால் நகர கூட முடியாத நிலையில் இருந்தேன்.

நான் விழித்தது மட்டும் தான் நினைவிருந்தது. மீண்டும் மயக்கமடைந்தேன். அடுத்த முறை நான் சுய நினைவிற்கு வந்த போது ஒரு மங்கலான இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தேன். ஒரு நடுத்தர வயது பெண்மணி வந்து என்னை சுத்தம் செய்து, உணவளிபார். பிறகு மீண்டும் எனது முகத்தை தலையணை வைத்து மூடி விடுவார்கள். நான் கத்தி கூச்சலிட்டு மயங்கிவிடுவேன்.

சப்தமிடும் போது ஒருவர் வந்து என்னை அடித்து அடக்குவார். பிறகு அடிக்கு பயந்து கத்துவதை நிறுத்தி கொண்டேன்.

என்னை (என் கற்பை) ஒரு வயதான ஷேக்கிற்கு விற்றனர்.அந்த ஷேக் ஒரு பெரிய பங்களாவில் வாழ்ந்து வந்தார். ஒரு வாரத்திற்கு என்னுடன் நான்கு முறை உறவு கொள்வார். நாட்கள் செல்ல, செல்ல அவர் வீட்டில் இருந்த அனைவராலும் நான் கற்பளிக்கப்பட்டேன்.

ஓர் பெரிய அறையில் நான் மட்டுமே தனியாக ஒரு மூலையில் கிடந்திருந்தேன். நான் எப்போதெல்லாம் அவர்களுக்கு தேவையோ அப்போதெல்லாம் என் அறைக்கு வந்து செல்வர்கள்.

சில நாட்கள் என்னால் உறங்க முடியாத அளவிற்கு வலி உண்டானது. அதை எப்படி கூறுவது என்று தெரியவில்லை. சில சமயம் நான் உறங்கி எழும் போது ஒரு நபர் என்னுடன் உறவில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்.

என் பிறப்புறுப்பில் காயங்கள் அல்லது இரத்த போக்கு அதிகமானால், ஒரு மருத்துவர் வந்து சரிசெய்துவிட்டு செல்வார்.

என் மீது அக்கறை கொண்ட ஒரே நபர் அந்த வீட்டில் பணிபுரியும் அந்த நடுவயது பெண் ஒருவர் தான். தினமும் எனக்கு வந்து உணவூட்டி செல்வார். என்னை குளிக்க வைப்பார். என்னை எப்போதும் சோகமான பார்வையில் தான் காண்பார். சில சமயம் எனக்காக அவர் அழுததும் உண்டு.

எனது வலியை உணரவும், நான் மிருகம் இல்லை சாதாரண இளம் பெண் என்பதையும் உணர அங்கே ஒரே ஒரு உயிர் தான் இருந்தது.

ஒரு நாள் திடீரென எனது அறையை மாற்றினர்.அந்த அறையில் நான் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தேன். நீண்ட நேரம் அழுதக் கொண்டே இருந்தேன். சில நாட்கள், சில வாரங்கள் தொடர்ந்தன. அந்த அறையும் எனக்கு பழக்கமானது.

இந்த புது அறையில் எனக்கு புது மாஸ்டர் இருந்தார். அங்கே எனக்கு எப்படி உடை அணிந்துக் கொள்ள வேண்டும், எப்படி மேக்கப் செய்துக் கொள்ள வேண்டும், எப்படி நடனம் ஆடவேண்டும் என்றெல்லாம் கற்பித்தனர். நான் பயிற்சி செய்து அதில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த இடத்தில் ஷேக்குகள் வரமாட்டார்கள். சாதாரண பேன்ட், ஷர்ட் அணிந்த ஆண்கள் தான் வருவார்கள்.

நான் ஒரு ரோபோட் போல மாறினேன். நான் எதையும் உணரவில்லை.

ஒரு நாள்… காக்கி சாரி அணிந்த பெண் ஒருவர் என்னை சுய நினைவிற்கு கொண்டு வந்தார். என்னை மிகவும் பலமாக உலுக்கினார். என் பெயர் என்ன என்று கேட்டார். என்னை சுற்றி என்ன நடக்கிறது என்று கூட எனக்கு தெரியவில்லை. எனக்கு எதுவும் நினைவில்லை. நான் அழ துவங்கினேன்.

நான் கடத்தப்பட்டதில் இருந்து, அனைத்தையும் கூறினேன். காட்டன் புடவை கட்டிய பெண் என் அருகே வந்து என்னை கட்டியணைத்தார். அவர்கள், “நாங்கள் உன்னை காப்பாற்றிவிட்டோம் “என கூறினார்கள்.

ஒரு வேனில் என்னை ஏற்றி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது தான் அது மும்பை என எனக்கு தெரியும். பிறகு நான் கடத்தப்பட்டதாகவும், என்னை கடத்தி ஐந்தாண்டுகள் ஆனதாகவும். ஐதராபாத்தில் என்னை அவர்கள் வைத்திருந்ததாகவும் கூறினார்கள்.

என்னை காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஒரு மனோதத்துவ மருத்துவர் வந்து பரிசோதனை செய்தார். நிறைய வகுப்புகள் சென்றேன். சிகிச்சைகள் மேற்கொண்டேன். அந்த டீலக்ஸ் ரூம் உறக்கத்தில் இருந்து வெளிவந்து, சாதாரண முறையில் எப்படி உறங்குவது என கற்றுக் கொண்டேன்.

எப்படியோ என் வாழ்வை சூழ்ந்திருந்த நரகத்தில் இருந்து வெளியானேன் என்பது பெரும் நிம்மதி கொண்டேன். சில நாட்கள் நான் ஒரு வெளியாள் போல என்னை உணர்ந்தேன்.

பல பாதுகாப்பற்ற கருக்கலைப்பு நடந்ததால். இனிமேல், என்னால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என மருத்துவர் கூறினார். கொஞ்சம், கொஞ்சமாக எனது புது வாழ்வை வாழ துவங்கினேன். மருத்துவர்கள் எனக்கு நிறைய உதவினார்கள்.

எனது குழந்தை பருவம் எனக்கு நியாபகம் வர துவங்கியது. காப்பகத்தின் மூலம் எனது பெற்றோரை தொடர்பு கொள்ள முயற்சித்தோம். எனது தாய் உடலுறுப்புகள் செயலிழந்து இறந்துவிட்டார் என்றும். எனது தந்தை, தாய் இறந்த சில நாட்களிலேயே தற்கொலை செய்துக் கொண்டார் என்றும் அறிந்தேன்.

நான் இருந்த காப்பகம் என்னை டெல்லிக்கு அனுப்பியது. அங்கே எனக்கு கணினி மற்றும் வெளிநாட்டு மொழி கற்கும் பயிற்சி அளித்தனர்.

இப்போது நான் ஒரு கணினி பயிற்சி சென்டரில் ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். இரண்டு பெண்களுடன் சேர்ந்து ஒரு தனி வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தேன்.

எனக்கான ஒரு துணை கிடைத்தான். எனக்கு மதிப்பளித்து, உண்மையாக விரும்பினான். நான் கடந்து வந்த பாதை முழுவதும் அவன் அறிவான். இன்னும் என்னால் சில நாட்கள் உறங்க முடியாது. திடீரென அச்சம் கொண்டு எழுந்து உட்கார்ந்து கொள்வேன்.

பல சமயங்களில் நள்ளிரவில் அவனுக்கு கால் செய்து பேசியுள்ளேன். அவன் என்னை பாதுகாப்பாக உணர செய்வான். அவன் ஒரு பஞ்சாபி. எனக்கு சிரிக்கவும், நடனம் ஆடவும், பாடவும் கற்றுக் கொடுத்தான். எனக்காக சுவையாக சமைத்து உணவு பரிமாறுவான். அவன் ஒரு சாதாரண மிடில்-கிளாஸ் ஆண்மகன்.

அவனால், என்னை பற்றிய உண்மைகளை அவனது வீட்டிலோ, நண்பர்கள் மத்தியிலோ கூற இயலாது. அதனால், பொய் கூறுவான். நான் புரிந்துக் கொண்டேன். ஆகையால், சில சமயங்களில் நானும் அவனது வீட்டாரிடம் பொய் கூறும் நிலை வரும்.

சமீபத்தில் தான் என்னிடம் அவன் பிரபோஸ் செய்தான். என்னால் அவனுக்கு சரி என சொல்ல இயலவில்லை. அவன் மிகவும் நல்லவன், அழகானவன். நான் அவனுக்கு ஏற்றவள் கிடையாது. அந்த தூய்மையானவனுக்கு, இந்த அசுத்தமானவள் ஏற்புடையவள் அல்ல.

அவனுக்கு மனைவியாகும் தகுதியும் எனக்கில்லை. நான் வேண்டாம் என கூறுவதன் காரணம் அவனும் அறிந்திருந்தான். என்னை ஏற்று கொள்ள உறுதியாக இருந்தான். ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என கூறினான். எனது கடந்த காலம் அவனுக்கு பிரச்சனையாகவே இல்லை.

ஆனால், என்னைவிட ஒரு நல்ல பெண் கிடைப்பாள் என்பதற்காக நான் காத்திருக்கிறேன். எனது சுமை அவனது வாழ்வை அழிக்க நான் விரும்பவில்லை.

இது தான் எனது ஆழமான, சோகமான இரகசியம். எனது கதையை இத்தனை நேரம் படித்தமைக்கு நன்றி!