ராதிகா ஆப்தே

பீச்சுக்கு பிகினி அணியாமல் புடவையா கட்ட முடியும்: ராதிகா ஆப்தே பதிலடி

ட்ரோல் ஆகும் ராதிகா ஆப்தேவின் பிகினி போட்டோ

நடிகை ராதிகா ஆப்தேவின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரோல் ஆகி வருகிறது.

நடிகை ராதிகா ஆப்தே தனது நண்பர்களுடன் கோவா சென்றார். கோவா கடற்கரையில் பிகினி அணிந்து எடுத்த புகைப்படத்தை ராதிகா சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
Radhika Apte has a fitting reply for those who trolled her for wearing a bikini

அவருடன் அவரது நண்பர் சட்டையே போடாமல் டவுசர் உடன் உட்கார்ந்திருக்கிறார். இதற்கு மேல் ஒருபடி மேலே சென்ற ராதிகா கையில் மதுபான கோப்பையையும் வைத்திருக்கிறார்.

அதை பார்த்து பலரும் அவரை கிண்டல் செய்தனர், கடுமையாக விமர்சித்தனர். இந்நிலையில் இது குறித்து ராதிகா ஆப்தே கூறியிருப்பதாவது,

என்னை கிண்டல் செய்கிறார்கள் என்று ஒருவர் சொல்லும் வரை அது எனக்கு தெரியாது. கடற்கரைக்கு சேலை கட்டிக்கிட்டா போகமுடியும்? எனக்கு அவர்களை யார் என்று தெரியாது, அதனால் அவர்களை கண்டுகொள்ளத் தேவையில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்