அன்பு

என் தோழியின் விசித்திர கனவுகள்

இது யதார்த்தமாக தான் நடந்தது. ஆனால் இதை கேட்டால் நீங்கள் யாருமே நம்ப மாட்டீர்கள். வேண்டாம் நீங்கள் யாருமே இதை நம்பத்தேவையில்லை ஆனாலும் சொல்கிறேன். நேற்று ஷவரில் குளித்தேன் நிர்வாணமாக இதில் என்ன இருக்கிறது என்று கடந்து செல்வதற்கு முன்னால் இன்னொரு தகவலையும் சொல்லிவிடுகிறேன். நான் குளித்தது என் நெருங்கிய தோழியுடன். நாங்கள் இருவருமே பெண்கள்.

எங்கள் இருவருக்கும் எதிர்காலம் குறித்த கனவு இருக்கிறது. மருத்துவத் துறையில் எண்ணற்ற சாதனைகளை படைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் விடுதியில் சந்தித்துக் கொண்ட… பழகிக் கொண்ட பறவைகள் நாங்கள்.

நான் சிறு குழந்தையாக இருந்த போதிருந்து உன்னோட லட்சியமென்ன என்று கேட்டால் மருத்துவராக வேண்டும் என்று சொல்லியே பழக்கப்பட்டு கடினமாக உழைத்து மருத்துவக் கல்லூரியில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். ஆனால் எனக்கு ஓவியங்கள் மீதும் வண்ணங்கள் மீதும் அலாதி ப்ரியம் இருந்தது. நிமிடத்தில் பென்சில் டிராயிங் வரைந்து அசத்துவேன். இது என்னுடைய பொழுது போக்காக மட்டும் இருந்தது. விடுமுறை நாட்களில் கேன்வாஸ் பெயிண்டிங் முயற்சி செய்வேன். அவளுக்கோ அப்பா , அம்மா , சித்தப்பா, மாமா, அத்தை என குடும்பமே மருத்துவக் குடும்பம். இவளுக்கு ஃபேஷன் துறையில் ஆர்வம். மாடலிங் செய்ய வேண்டும் என்று பெருங்கனவு கொண்டிருந்தால் ஆனால் எல்லாவற்றையும் ஒதுக்கிவிட்டு வீட்டிற்கு நல்ல பிள்ளையாய் மருத்துவம் படிக்க வந்துவிட்டாள்.

உபயம் : லட்சக்கணக்கான பணம் மற்றும் அப்பாவின் செல்வாக்கு தான்.

கல்லூரி ஆரம்பித்து ஒரு வாரம் கழித்து தான் வந்தாள். நான் அவளை முதன் முதலில் பார்த்தது அனாடமி வகுப்பில் தான். பார்த்தவுடனேயே முடிவெடுத்துவிட்டேன். அவளைய வரைய வேண்டும் என்று. யாருக்கும் தெரியாமல் வைத்திருக்கும் நோட்டின் கடைசி பக்கத்தில் அவளது முன் நெற்றி, அதில் சுருண்டு கிடக்கும் கற்றையான முடி,குழி விழும் கன்னம், தாடை, கை அதை தாண்டி தெரியும் மார்பு என அவளின் ஒரு பக்கத்தை ரஃப் செக்ட்ச் செய்தேன். முழுமை பெறாத அந்த ஓவியமே எனக்கு அவ்வளவு பிடித்தது.

இதைச் செய்வதால்…. ஒரு பெண்ணின் மேல் ஈர்ப்பு கொண்டதால் நான் லெஸ்பியன் என்று நினைத்துக் கொண்டால் அது உங்களுடைய பிரச்சனை. பார்த்தும் ஒரு ஈர்ப்பு, சட்டென கடந்த போக முடியாத உருவம் அவளுடையது. ரசிக்கிறேன். ஆசை தீர ரசிக்கிறேன் அவ்வளவு தான் எனக்குத் தெரியும். இன்றளவும் எங்களுக்கு தெரியவில்லை எப்படி இவ்வளவு நெருக்கமானோம் என்று. குறிப்பிட்டுச் சொல்லும்படி எந்த சம்பவமும் நினைவில் இல்லை. அனாடமி வகுப்பில் எப்போதும் என் பக்கத்தில் தான் உட்காருவாள். கிளாஸ் பிடிக்காமல் தவிக்கும் போது வா போலாம் என்று லைப்ரேரிக்கு கூட்டிச் செல்வாள். அதில் கடைசி செல்ஃப் க்கும் சுவற்றுக்கும் நடுவில் சேர் போட்டு நாங்கள் உட்கார்ந்து கொள்வோம். முறைப்பதும், சிரிப்பதும் அடிப்பதுமாய் பொழுதுகள் கழியும்.

ஒரு நாள், உன்னை வரைய வேண்டும் என்றேன் அவளிடம் . என்னையவா? என்று ஆச்சரியத்துடன் கேட்டு பின்னர் ஓ…. வரையலாமே என்று சொல்லி என் தோலில் கை போட்டு அணைத்துக் கொண்டாள். ஹே விளையாடாத…. நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீ என்ன பண்ற என்று சொல்லி என்னை அணைத்துக் கொண்டிருந்த அவளை விளக்கி விட்டேன்.

சட்டென முகம் மாறியது அவளுக்கும். கொஞ்சம் இடைவேளி விட்டு, சரி நீ வரையறதுக்கு நான் போஸ் கொடுக்கணும்ன்னா நீ எனக்கு ஒரு ஃபேவர் பண்ணனும் என்று நிறுத்தினாள். கேட்பது அவள் தானே என்ன வேண்டுமானாலும் செய்யலாம்…. செய்வேன் என்ற உறுதியுடன் கேளு செய்றேன்.

கண்டிப்பா?

சத்தியமா…..

அப்பறம் பேச்சு மாறமாட்டியே….

இல்ல மாறவே மாட்டேன்.

என்று சொன்னதும் என்னை அணைத்துக் கொண்டாள். என் நெஞ்சில் அவளின் முகத்தை புதைத்து நிஜமா செய்வியா என்று மெல்லிய குரலில் கேட்டாள். உன் மேல சத்தியமா செய்றேண்டீ என்று அவளின் தலையில் கை வைத்து சத்தியம் செய்தேன். அவளை அணைத்துக் கொண்டே சுவற்றோரம் சென்று சரி சொல்லு நா என்ன பண்ணனும் என்று கேட்டேன். என்னை ஏறெடுத்தும் பார்க்கவில்லை இறுக்க கட்டிக்கொண்டாள்.

ஒரு பேனாவை எடுத்து என் உள்ளங்கையில் இப்படி எழுதினாள்.

I want to See U Naked.

அவள் ஒவ்வொரு எழுத்தாய் எழுதும் போதே நான் படித்துக் கொண்டே வந்தேன். எழுதி முடித்து விட்டு என் அணைப்பிலிருந்து விடுபடாமல் ஒரு சுழன்று சுற்றி என் கண்ணைப் பார்த்தால்… யப்பா…. இந்த கண்ணுக்காகவே என்ன வேணா பண்ணலாமே என்று தோன்றியது. வாயெடுத்து எதுவும் சொல்லவில்லை. அவள் தன் இரண்டு கைகளையும் என் கன்னங்களில் வைத்துக் கொண்டாள். சரியா என்று கேட்பது போல் தலையசைத்தாள். அவளை இன்னும் இறுக்கமாக அணைத்து கண்டிப்பாடீ என்று சொல்லி நெற்றியில் அழுத்த ஒரு முத்தமிட்டேன்.

நீயும் என்னைய அப்படித்தான வரையப்போற என்று கேட்டாள். அடப்பாவமே இதுவரை எனக்கு இது தோன்றவேயில்லையே என்று மனதில் நினைத்துக் கொண்டே… ஆமாமா பின்ன வேறெப்டி வரைவாங்களாம் என்று சொல்லி வைத்தேன். உனக்கு இதுல எந்தப் பிரச்சனையும் இல்லையே என்று கேட்டாள். நான் பதிலேதும் சொல்லவில்லை

இது நடந்து நாங்களே மறந்து போனோம். ஒரு மாதம் கழித்து ஒரு விடுமுறை நாளில் அவளின் லேப்டாப்பில் இருவரும் உட்கார்ந்து படம் பார்த்துக் கொண்டிருந்தோம். என் மடியில் தலைவைத்து லேப்டாப்பிற்கு முதுகை காண்பித்து திரும்பி படுத்துக் கொண்டாள். இங்க என்ன டீ பாக்குற முன்னாடி திரும்பு என்றேன். எனக்கு இது தான் வேணும் என்று சொல்லி அணைத்துக் கொண்டாள். ஹாஸ்டலில் மதிய சாப்பிட்டிற்க்கான பெல் அடிக்கும் சத்தம் கேட்க இருவரும் எழுந்து கொண்டோம். சரி நீ போய் சாப்பாடு எடுத்து வை நா குளிச்சிட்டு வரேன் என்று சொல்லி அவளை அறையிலிருந்து அனுப்பிவிட்டு நான் குளிக்க பாத்ரூமுக்குள் சென்றேன்.

கதவைத் தாழ்பாள் போட்டதுமே பாத்ரூம் கதவை தட்டினாள்.
என்னடி…?
என்னைய வரையணுமா?
பதிலேதும் சொல்லவில்லை கதவைத்திறந்தேன்.

அந்த சிறிய அறை எங்கள் இருவருக்கும் போதுமானதாக இருந்தது. ஷவரைத் திருகினேன். இருவருமே நனைந்து கொண்டிருந்தோம். அவள் குனிந்த தலை நிமிராமல் தன் சட்டை பட்டை கழற்றிக் கொண்டிருந்தாள். நானும். அவள் ஒவ்வொரு உடையாய் கழற்றுவதாய் அணு அணுவாய் ரசித்துக் கொண்டிருந்தேன். ஷவரிலிருந்து விழும் நீர் அவள் மேல் விழுந்து.. ஒவ்வொரு பாகமாய் கடந்து செல்வதை அனுபவித்தேன்.

புதுமையான அனுபவமாய் இருந்தது. என் விரல்களை பிடித்து கைகளுக்கு முன்னேறி எனக்கு மிக நெருக்கமாக வந்து நின்றாள். அவளின் இடுப்பை வளைத்து அணைத்துக் கொண்டேன். எல்லாமே கனக்கச்சிதமாக இருந்தது என்றெல்லாம் சொல்ல மாட்டேன். உங்களுக்கு குறைகளாக தெரிந்தவை கூட எனக்கு இன்பமாய் தான் இருந்தது. இங்கயிருந்து வரைய ஆரம்பிக்கவா என்று சொல்லி அவள் நெற்றியில் என் கையைவத்து விரல்களால் வரைய ஆரம்பித்தேன். அரைமணி நேரம் கடந்திருந்தது. வெளியே வந்துவிட்டோம். வழக்கமாக விடுதி கல்லூரி என்று தொடர் வாழ்க்கை ஆரம்பமானது.

விலைமாது போட்ட விசித்திர கண்டிசன்! குற்ற உணர்வில் இளைஞன்

Life story of a sex worker

அண்ணா பணத்த ரெடி பண்ணிட்டேன் என்று அசடு வலிந்து கொண்டே நின்றான். அப்ப முடிச்சிரலமா? எப்பன்னு டேட்ட சொல்லு நான் பாத்துட்டு சொல்றேன். கண்டிப்பாண்ணா….

பல நாள் கனவு நிறைவேறப் போகிறது. இனி நண்பர்கள் மத்தியில் கெத்து தான்..எங்கே முதன் முதலாக நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது நண்பன் சொன்னது. அன்றைக்கு சபதமேற்று இதோ என்னுடைய இருபத்தியாறாவது வயதில் நிறைவேறப் போகிறது.

டேய் இதுக்குண்ணே ஆளுங்க இருப்பாங்கடா… நம்ம காசு கொடுத்தா நம்மகிட்ட கூட வருவாங்க என்று பள்ளியறையில் கடைசி பென்ச்சில் உட்கார்ந்து கிசுகிசுக்கும் போது எனக்கு அவ்வளவு ஆச்சரியம். காசு கொடுத்தா கண்டிப்பா வருவாங்களாடா என்று நம்பாமல் அவனிடமே பலமுறை கேட்டிருக்கிறேன்.

நாங்கள் ஒண்ணு முயற்சி செய்யாமல் எல்லாம் இல்லை. சரியான காண்டாக்ட் கிடைக்காமல் தான் இத்தனை காலம் தாமதித்திருக்கிறோம். பன்னிரெண்டாம் வகுப்பின் போதே இதற்கென்று பணத்தை தொலைத்து ஏமாந்த கதையும் உண்டு. எங்களூரில் அந்த தியேட்டர் பிட்டு படத்திற்காகவே பிரபலமானது.தப்பித்தவறியும் ஒரு பெண் கூட அந்த தியேட்டர் பக்கம் எட்டிப் பார்க்க முடியாது. அத்தனையும் ஆண்கள் கூட்டம். பத்தாம் வகுப்பிற்கு பிறகு அடிக்கடி அந்த தியேட்டருக்கு செல்ல ஆரம்பித்தேன். சில முறை அங்கிருந்து விரட்டியடிக்கவும் பட்டிருக்கிறேன்.

அங்கே நண்பனான ஒருவன் மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பின் போது வீட்டில் எல்லாரும் ஊருக்கு கிளம்பும் சமயம் அந்த தெய்வத்தை வீட்டிற்கு அழைக்கலாம் என்று நானும் நண்பனும் திட்டமிட்டோம். தியேட்டர் நண்பனிடம் கேட்க உங்க இடத்துக்கு வரணும்னா ரொம்ப செலவாகும்டா என்று முதல் முட்டுக்கட்டை போட்டான். அவங்க இடம்னாலும் ஒ.கே.,தாண்டா என்று சொல்ல. அவங்க இடம்னா நம்ம சொல்ற டைமுக்கு இருக்காது அது தான் பிரச்சனை என்று யோசித்தான்.நாங்கள் விடாது கெஞ்ச சரி… நான் வேற இடம் பாக்குறேன் என்று சொல்லிவிட்டான்.

இன்னக்கி பணத்த கொடுத்தா நாளைக்கு ரெடி பண்ணிடலாம். ஆளெல்லாம் ரெடி பண்ணிட்டேன் என்று சொன்னான் ஒரு நாள் அந்த தியேட்டர் நண்பன். மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்க பணம் எவ்வளவு என்று தெரிந்ததும் சுருங்கிவிட்டோம். இரண்டாயிரம் ரூபாய்…. இப்போது அது சாதரணமாக தெரிந்தாலும் தொண்ணூறுகளில் அது மிகப்பெரிய பணம் தான். அதுவும் பள்ளியில் படிக்கும் சிறுவன் திடீரென்று அவ்வளவு பணத்திற்கு எங்கே செல்வான். பல நண்பர்களிடம் கடன் வாங்கி, வீட்டில் திருடி,சைக்கிளை விற்று, ஒரு வாரம் வேலைக்குச் சென்று என ஒரு வழியாக இரண்டாயிடம் ரூபாயை தேற்றினோம். அவனுக்கு தகவல் தெரிவிக்க எங்களை ரெட்டைக்கண் பாலம் அருகில் இருக்கும் டீக்கடையில் சந்தித்து பணத்தை வாங்கிக் கொண்டான்.

வீடு பக்கத்துல தான் அங்க ரெடியாச்சான்னு பாத்துட்டு வர்றேன் என்று சொல்லிவிட்டு சென்று விட்டான். இன்னும் சில மணி நேரத்தில் எல்லாம் முடிந்திடும் என்று இருவரும் மிகவும் ஆவலாக காத்திருந்தோம். அவன் சென்று அரைமணி நேரம்… ஒரு மணி நேரம் கடந்தது எங்கடா ஆளையே காணோம் என்று இருவரும் மாறி மாறிமுழிக்க அந்த டீக்கடைக்காரர் எங்களை முறைத்தார்.

என்னங்கடா ரொம்ப நேரம் இங்கேயே இருக்கீங்க… இல்ல தாத்தா ஃபிரண்டு வரேன்னான்.நான் பணத்த என்று ஆரம்பிக்க நண்பன் கையைப் பிடித்து இழுத்து சொல்ல வேண்டாம் என்று சைகை செய்தான். மேற்கொண்டு அவர் எதுவும் சொல்லவில்லை.

முழுதாக இரண்டு மணி நேரம் கழிந்தது.பணத்தோடு போனவன் வரும் அடையாளமேயில்லை.மெல்ல ஏமாற்றப்பட்டதை உணர ஆரம்பித்தோம். அடக்க முடியாத கோபம்… யாரிடம் சொல்ல, எப்படி ஏமாற்றப்பட்டதை சொல்ல, எப்படி அவனைத் தேட அவன் வருவானா மாட்டானா என்று எதுவும் தெரியாது. ஆனால் அடக்க முடியாத கோபம். எங்கள் உழைப்பை திருடிவிட்டான். எவ்வளவு ஆசையுடன் எத்தனை சங்கடங்களை தாண்டி இந்த பணத்தை சேர்த்து அவனிடம் கொடுத்தோம். ஆனால் ஒரேயடியாக பணத்தை வாங்கிக் கொண்டு இப்படிச் சென்று விட்டானே என்று நினைக்கும் போது ஆத்திரம் இன்னும் அதிகரித்தது.

அன்றிலிருந்து நாங்கள் கொஞ்சம் சுதாரிப்பாகவே இருக்கிறோம். இதோ இன்றைக்கு வாட்சப்பில் படத்தையும் இடத்தையும் கன்ஃபார்ம் செய்த பிறகு தான் பணத்தை கொடுப்பேன் என்று சொல்லிவிட்டேன். நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் மட்டும் விஷயத்தை பகிர்ந்து கொண்டேன்.முக்கியமாக அந்த பன்னிரெண்டாம் வகுப்பிலே என்னோடு சேர்ந்து ஏமாற்றபட்டவனிடம். அந்த நாளும் வந்தது.

அவன் வாட்சப்பில் அனுப்பியிருந்த அட்ரஸை கூகுள் மேப்பில் போட்டு வண்டியை கிளப்பினேன். அதே எங்கேனும் முட்டு சந்தில் இருக்கும் லாட்ஜாக இருக்கும் என்று தேடிக் கொண்டிருக்க ஆனால் அது சராசரிக்கும் கொஞ்சம் கீழ் நிலையில் வசிக்கும் பகுதியில் இருந்த ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு . வண்டியை நிறுத்திவிட்டு நான்காவது மாடி ஏறினேன். பழைய கட்டிடம் சுண்ணாம்பை பார்த்தே பல ஆண்டிருக்கும் போல..ஆட்கள் வருவதும் போவதுமாய் தண்ணீர் குடம் தூக்கிக்கொண்டு அசால்டாக மாடியேறிடும் பெண்கள் என்னை ஆச்சரியப்படுத்தினார்கள்.

நான்கு மாடி நான் ஏறுவதற்கே சிரமப்பட அவர்கள் தண்ணீர் குடத்துடன் அசால்டாக ஏறுகிறார்கள். நான்காவது மாடி அந்த வீடு வந்துவிட்டது. பெல் அடித்தேன். வயதானப் பெண் ஒருவர் கதவைத்திறந்தார். ஐயையோ வீடு மாறி விட்டது போல என்று நினைத்து என்ன சொல்வதென்றே தெரியாமல் திரும்பி அடுத்த வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

ஏய் தம்பி….______அனுப்பின ஆள் தான என்று சொல்லி இங்கே என்னை அனுப்பியவரின் பேரைச் சொல்ல, நான் திரும்பி ஆமாங்க இந்த இடம் தானா என்று கேட்டுக் கொண்டே திரும்பினேன். உள்ள வா…. வாட்ஸப்புல வந்த போட்டோ உன் மூஞ்சி மாதிரி தான் இருக்கு என்று என்னை உள்ளே அழைத்து கதவை சாத்தினார்.

என்னது வாட்ஸப்ல என்னைய பாத்தீங்களா? அவன் அனுப்பினானா என்று கோபத்துடன் கேட்க ஆமா நீங்க மட்டும் எதோ பொண்ணு பாக்குறவக மாதிரி நிக்கிற போட்டா கொடுங்க, உக்காந்திருக்கிற போட்டா கொடுங்கன்னு கேக்குறதில்லையா அதே மாதிரி தான். நாங்களும் மூஞ்சிய பாத்து ஓ.கே பண்றோம் என்றார். ஹாலில் உட்கார வைக்கப்பட்டேன். சுற்றிலும் சாமான்.

டேபிளில் வைக்கப்பட்டிருந்த இலவச டீவியில் ஏதோ ஒரு கார்டூன் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு வயதுக் குழந்தையொன்று உள்ளறையில் இருந்து ஓடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தவரின் காலை கட்டிக்கொண்டு தூக்கிக் கொள்ளச்சொன்னது. நாங்கள் பேசிக்கொண்டிருக்க உள்ளறையிலிருந்து நைட்டியுடன் ஒரு பெண் மேலே துண்டை மட்டும் போட்டுக் கொண்டு வெளியே வந்த் கிட்சனுக்குள் நுழைந்தார்.

அவரைப் பார்த்ததும் தம்பி வந்திருக்கு என்று என்னை கைகாட்ட… சுரத்தையே இல்லாமல் இந்தா வர்றேன் என்று சொல்லி திரைச்சீலையை இழுத்து விட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தார். என்னடா இது ஏதோ நம்ம வீட்டுக்குள்ள உக்காந்திருக்கிற மாதிரி இருக்கு. இவர் யார்,இந்த குழந்தை, என்னுடன் வரப்போவது? எதுவுமே புரியாமல் விழிக்க கிச்சனில் குக்கர் சத்தம் கேட்டது.

என்னுடன் பேசிக்கொண்டிருந்த கிழவி ஓடிச்சென்று அணைத்தார். நான் போன் நோண்டிக்கொண்டே காத்திருந்தேன். பாத்ரூமுக்குள் சென்ற பெண் வெளியே வந்து , தண்ணீ வர்ல ரெண்டு குடம் எடுத்துட்டு வந்திரவா என்று சொல்லி என்னிடம் அனுமதி கேட்டார். நான் மிரட்சியுடன் இதுக்கு எதுக்கு என்கிட்ட என்று முழிக்க அந்தப் பெண் லேசாக சிரித்தபடி இரண்டு காலி குடங்களுடன் வெளியேறினார்.

முழுதாக அரை மணி நேரம் கடந்த பிறகு இரண்டு தண்ணீர் குடங்களுடன் உள்ளே நுழைந்தார். எங்க பக்கத்து வீட்ல இருந்தா தண்ணீ எடுத்துட்டு வர்றீங்க என்று கேட்க அடேயப்பா…. இங்கன குடுத்துட்டு தான் மறு வேல பாப்பாங்க… நான் தெருமுக்குல அடிபைப் இருக்கு அங்கயிருந்து தண்ணி பிடிச்சுட்டு வர்றேன் என்றார். கீழயா …தெருவுலயா எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை நாலு மாடி எப்டிங்க ரெண்டு குடம் தூக்கிட்டு வந்தீங்க என்று கேட்க…. சுரத்தையே இல்லாமல் பழகிடுச்சு என்றார்….

இங்க வா.. அப்பறம் போய் அழுவான். சாப்ட்டு ஒரு மணி நேரம் ஆயிருக்கும்ல… என்று குழந்தையை இழுத்து தன் மடியில் பாட்டு சுவற்றுப் பக்கம் திரும்பி உட்கார்ந்து கொண்டாள். மேலே போர்த்தியிருந்த துண்டை மூடி தாய்ப்பால் கொடுக்க ஆரம்பித்தாள். தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே… சோறும் குழம்பும் வச்சிட்டேன். வெண்டக்காவ மட்டும் தாளிக்கணும்.

இவன் இப்போ ரெண்டு மணி நேரம் தூங்குவான். எந்திரிச்சதும் சாப்பாடு கொடுத்துருங்க… காரம் சாப்ட மாட்டான். அதனால பால் இல்லன்னா சுடுதண்ணி கொஞ்சம் உப்பு போட்டு கொடுத்திருங்க அதுக்குள்ள வந்திடுவேன். குழந்தை தூங்கி விட்டது. அவனை தொட்டலில் போட்டுவிட்டு உள் அறைக்குள் சென்றார். பத்து நிமிடங்களில் சேலையில் மாறியிருந்தார், முழு ஒப்பனையுடன் கதவைத்திறந்து என்னை அழைத்தார். நானா? என்று கேட்க ஆமாம் என்பது போல தலையசைத்தார்.

அப்ப… சரி நான் ரேசன் கடைக்கு போய்ட்டு அப்டியே கோவிலுக்கு போய்ட்டு வர்றேன். ஹால் கதவ பூட்டிக்கோ என்று சொல்லி ஒரு கூடையை எடுத்துக் கொண்டு கிளம்பினார். முன்னறை கதவு தாழிடப்பட்டது. என்னங்க நீங்களா… எனக்கு தர்மசங்கடமாகிவிட்டது. போட்டோல… என்று நிறுத்த அது கல்யாணத்தப்போ எடுத்தது. இப்போ ரெண்டு புள்ள பெத்து போட்டாச்சுல்ல.. ரெண்டா??

ஆமா பெரியவ ஸ்கூல் போயிருக்கா மூணு மணிக்கு போய் கூட்டிட்டு வரணும். மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை. அமைதியாக இருந்தேன். என்ன ஃப்ர்ஸ்ட் டைமா என்று கேட்க தலையசைத்தேன். பாத்தாலே தெரியுது.

ஒரு பெண்ணால் எப்படி எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு சமாளித்து நிற்க முடிகிறது என்று நான் யோசித்துக் கொண்டிருக்கும் போதே லைட்டை அணைத்தார். சேலையை அவிழ்க்க ஆரம்பித்தார். எவ்ளோ நேரம் இப்டியே யோசிச்சுட்டே உக்காந்திருக்க போறீங்க என்று சொல்லி கட்டிலில் படுத்துக் கொண்டார். என்னை நினைத்து காரி துப்பிக் கொள்வதா? அந்தப் பெண்ணை நினைத்து ஆச்சரியப்படுவதா என்று எதுவும் தெரியவில்லை.ஆனால் நான் மிகுந்த குற்ற உணர்ச்சியில் தத்தளித்தேன். பின்னால் திரும்பி பார்த்தேன் மேல்மாராப்பை விலக்கி விட்டு படுத்திருந்தார். எழுந்து காலருகில் சென்றேன்.

காலை எடுத்து மடியில் வைத்து அமுக்க ஆரம்பித்தேன். யோவ் என்னயா பண்ற…. கொஞ்ச நேரம் கால் அமுக்கி விடறேங்க ப்ளீஸ்… ரொம்ப கஷ்டமா இருக்கு என்ன சொல்லறதுன்னு தெரில என்று உடைந்துவிட்டேன். அரை மணி நேரம் கடந்திருக்கும். நன்றாக தூங்கிவிட்டார். அறையில் ஒளிர்ந்த அந்த மஞ்சள் விளக்கில் அவரது முகம் தனியாக தெரிந்தது. சேலை எடுத்து போர்த்திவிட்டேன்.

சிறிது நேரமாவது நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். குழந்தை அசைந்து தொட்டிலில் கட்டியிருக்கும் மணியோசை லேசாக கேட்க சட்டென முழித்து உட்கார்ந்தார். என்னையும் ஹால் பக்கமும் பார்வையை திருப்பி அதிர்ச்சியும் இயலாமையும் கலந்த பார்வையை வீசி சுவற்றுப் பக்கம் சாய்ந்து உட்கார்ந்தார். ரொம்ப நேரம் தூங்கிட்டேனா?… காலைல ஐஞ்சு மணிக்கு எழுந்தரிச்சது அதான் கொஞ்சம் அசந்துட்டேன் போல

கேக்ககூடாது தான் ஆனாலும் மனசு தாங்கல… வீட்டுக்காரரு.. என்று இழுக்க அவனா கூலி வேலைக்கி போறான் ஒரு நாளைக்கு இரணூத்து அம்பது ரூவா சம்பளம். அதுல நூறு ரூவா குவட்டருக்கு. சில சமயம் முழு பணத்தையும் குவாட்டருக்கு அழுதுட்டு வெறும் கைய வீசிட்டு வருவான். நான் 12த் வரைக்கும் படிச்சிருக்கேன். வரிசையா டிகிரி படிச்சவனுக்கே வேல கிடைக்க மாட்டிங்குது எனக்கு மட்டும் எங்கிட்டு கிடைக்க போகுது.

குடும்பம், குழந்த…குட்டின்னு ஆயாச்சுல்ல சோத்துக்கு என்ன பண்றது வேற நாதியில்ல.. உடம்பு… வலியா? அது மறத்துப் போச்சு கல்யாணம் ஆன புதுசுல எல்லாம் ஒரு நாளைக்கு பத்து பதினெஞ்சுன்னு வருவாங்க நைட்டு இவன்…. தினம் தினம் செத்து பொழைப்பேன் செத்துரலாமான்னு தோணும். ஆனா பயம் ஆனாலும் விடலயே பால்டாயில குடிச்சிட்டேன்.

ஐயையோ என்று பதற….. பயப்படாதீங்க ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க… அங்க பாத்துட்டு மாசமா இருக்கேன்னு சொல்லிட்டாங்க என்று சொல்லி கலகலவென சிரிக்கிறார். பெரியவ.. பொறந்தா. அப்பறம் நாலு வருஷம் கழிச்சு இதோ சின்னவன். எப்டியோ வாழ்க்க ஓடுது என் புள்ளைங்களா நல்லா படிக்க வைக்கணும் பெரிய ஆள் ஆக்கணும் அவ்ளோதாங்க என் வாழ்க்க…. அமைதியாக இருந்தேன்.

அவரே தொடர்ந்தார்… மூணு வாட்டி அபார்ஷன் பண்ணியாச்சு ரெண்டு குழந்த பெத்தாச்சு… இது உடம்பா மெஷினான்னே தெர்ல… இன்னொருவாட்டி மாசமா இருக்கேன்னு வந்த நானே விஷ ஊசி போட்டு கொன்றுவேன்.. உன் உடம்பு மேல கொஞ்சமாவது அக்கற இருக்கான்னு அந்த நர்ஸு பொம்பளை பயங்கரமா திட்டிச்சு என்று சொல்லி சிரித்தார். நம்ம பொழப்பு இப்டி…. நீண்ட நேர மௌனத்திற்கு பின் ஒரேயொரு உதவி பண்ண முடியுமா?

சொல்லுங்க… என்ன பண்ணனும் என்றேன் நான் அனுபவித்துக் கொண்டிருக்கும் குற்ற உணர்ச்சிக்கு ஒரு பிரயாச்சித்தம் கிடைக்கப் போகிறது என்று மகிழ்ந்தேன். காசு எதும் குறைக்க மாட்டீங்கள்ள…. இல்ல நிறைய பேரு பணத்த கொடுக்காம போய்டுவாங்க….நான் வேற பேசிட்டேயிருக்கேன் என்று நிறுத்த பேசியதை விட இரண்டாயிரம் ரூபாய் சேர்த்து நீட்டினேன். இந்த குற்ற உணர்ச்சியிலிருந்த மீள விரைவில் எனக்கு வழி கிடைக்க வேண்டும்.