வாட்ஸ்ஆப்பில் புதிய வசதி; ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு முதலில்.!

WhatsApp to soon allow users to switch between voice to video calls

அண்மையில், வாட்ஸ்ஆப்பில் உருட்டப்பட்ட மிகவம் எதிர்பார்க்கப்பட்ட அம்சமான ‘டெலிட்’ அம்சம் கிட்டத்தட்ட “சொதப்பிவிட்டது” என்றுதான் கூறவேண்டும்.

அனுப்பிய மெசேஜை உடனடியாக டெலிட் செய்தாலும் கூட பெறுநரால் குறிப்பிட்ட மெசேஜை அணுக முடிகிறது என்ற தொகுப்பை சமீபத்தில் கண்டோம்.

அதனை தொடர்ந்து தற்போது மேலுமொரு புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்.? இந்த புதிய அம்சம் உருட்டப்பட்டுள்ள வெர்ஷன் என்ன.? என்பது பற்றிய விவரங்களை காண்போம்.

வாட்ஸ்ஆப் பணியாற்றி வரும் இந்த புதிய அம்சமானது, பயனர்களை மிகாவுக்கும் எளிமையான முறையில் குரல் அழைப்பில் இருந்து வீடியோ அழைப்புக்கு மாறுவதற்கு அனுமதிக்கும்.

இந்த சமீபத்திய “ஸ்விட்ச்” அம்சமானது, சமீபத்திய ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பு 2.17.163-இல் காணபட்டுள்ளது. வெளியானதொரு வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் மெசேஜிங் பயன்பாட்டில் இந்த அம்சத்திற்கான ஒரு புதிய பொத்தான் சேர்க்கப்படும்.

அந்த பொத்தான் மூலம் பயனர்கள் விரைவாக குரல் அழைப்புகளை நிறுத்தாமலேயே, அது நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே வீடியோ அழைப்புகளுக்கு மாறுவதற்க்கான அணுகல் கிடைக்கும். உடன் உள்வரும் வீடியோ அழைப்புகளை நிராகரிக்கும் விருப்பமும் இணைக்கப்படும்.

முன்னதாக, வாட்ஸ்ஆப் அதன் ஐபோன் பயனர்களுக்கான அதன் சமீபத்திய வி2.17.70 பீட்டாவில் க்ரூப் குரல் அழைப்புகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான ஒரு புதிய அம்சத்தை பரிசோதித்து அறிக்கை வெளியிட்டது. அந்த அம்சம் அடுத்த ஆண்டு உருட்டப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெர்ஷன்களில் வாட்ஸ்ஆப் பயனர்கள் ஒரு நேரத்தில்ரு குரல் அழைப்பு அல்லது வீடியோ அழைப்பு ஆகிய இரண்டில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய முடியுமென்பது குறிப்பிடத்தக்கது. ஆக கூறப்படும் அம்சமானது வாட்ஸ்ஆப் பயனர்களுக்கு மத்தியில் விரைவில் பிரபலமடைய அதிக வாய்ப்புள்ளது.

இதற்கிடையில், வாட்ஸ்ஆப் நிறுவனமானது ஆப்பிள் ஐபாட்களுக்கான ஒரு பிரத்யேக பயன்பாடு சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது. அவைகள் டெஸ்க்டாப் பயன்பாட்டின் சமீபத்திய பதிப்பில் காணப்பட்டன என்று வாட்ஸ்ஆப்பீட்டாஇன்ஃபோ ட்வீட் செய்திருந்தது.

இருப்பினும், வாட்ஸ்ஆப் நிறுவனம் ஐபாட்களுக்கான ஒரு பிரத்யேக பயன்பாட்டைக் கொண்டுவருமா அல்லது அல்லது வாட்ஸ்ஆப் வெப் போன்ற க்ளையன்ட் பயன்பாடு கொண்டுவருமா என்பது பற்றிய தெளிவு இல்லை. அவ்வப்போது வெளியாகும் வாட்ஸ்ஆப் அப்டேட்ஸ் மற்றும் தொழில்நியூப செய்திகளை உடனுக்குடன் பெற தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.