இலங்கை முதல் ஹெச்டி தொலைக்காட்சி உதயம் டிவி ஒளிபரப்பு

Udhayam tv first Tamil HD Channel In Sri Lanka

இலங்கையின் கிழக்கு மாகாணம் தலைமையிடமாக கொண்டு தமிழ் மக்களின் பொழுது போக்கு தொலைக்காட்சியாக கடந்த வருடத்தில் தொடங்கப்பட்ட உதயம் டிவி உயா் தொழில்நுட்பமான ஹெச்டியில் ஒளிபரப்பு தொடங்கப்பட்டுள்ளது.

முற்றிலும் இலவசமாக 70+ தொலைக்காட்சிகளை காணலாம்

இலங்கையின் முதல் தமிழ் ஹெச்டி தொலைக்காட்சியாகும்.தொலைக்காட்சியின் ஒளிபரப்பு இலங்கையின் முன்னனி நகர கேபிள் டிவி நிறுவனமான யூஎஸ்(12).எல்பிஎன் டிவி(4).தரைவழி ஒளிபரப்பாக கொழும்புவில் 54 அலைவாிசை மற்றும் டயலாக் டிடிஎச்யில் 23 அலைவாிசையில் வாயிலாக நாடு முழுவதும் ஒளிபரப்பாகிறது.

இவற்றில் கேபிள் டிவியில் ஹெச்டி தொழில்நுட்பத்தில் உதயம் டிவியின் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிறது.விரைவில் டயலாக் டிடிஎச்யிலும் ஹெச்டியில்  ஒளிபரப்பை தொடங்கலாம்.

இலங்கையினை பொறுத்தமட்டிலும் தமிழ் மொழியில் தொடங்கப்பட்ட மூன்றாவது ஹெச்டி தொலைக்காட்சியாகும்.டான்டிவி மற்றும் டான் மியூசிக் ஹெச்டி தொலைக்காட்சிகள் வட மாகாணங்களில் ASK MEDIA கேபிள் டிவியில் மட்டும் ஒளிபரப்பாகிறது.

You may also like...