புதிய ஆஃபரை வெளியிட்ட ஜியோ.!தோல்வியைச் சுதாரித்துக் கொண்ட முகேஷ் அம்பானி

ஜியோ ப்ரைம் பயனரா நீங்கள்.? அடித்தது அதிர்ஷ்டம், முந்துங்கள் நவ.25 வரை மட்டுமே.!

Reliance Jio New Cash Back Offer

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் போட்ட கோட்டில் தான் இதர டெலிகாம் நிறுவனங்கள் ரோடு போட்டு வண்டி ஓட்டிக்கொண்டிருக்கின்றன.

அதாவது ரிலையன்ஸ் ஜியோவின் அனைத்து வகையான ரீசார்ஜ் திட்டங்களையும் காப்பி அடித்து – அதே மாதிரியான நன்மைகள், கிட்டத்தட்ட ஒரே மாதிரியான விலை நிர்ணயத்தில் – அவரவர் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

இந்நிலைப்பாட்டில் ஏர்டெல் நிறுவனம் ஒருபடி மேலே சென்று நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி அளவிலான 4ஜி டேட்டா, பிராண்ட்பேண்ட் பயனர்களுக்கான ரோல்ஓவர் வசதி, அதாவது பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த பில்லிங் சுழற்சிக்கு கொண்டு செல்லும் வசதி மற்றும் ஏர்டெல் டிவி இலவச சந்தா என ஜியோவை மெல்ல மெல்ல பின்தள்ளும் அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருந்தது. இப்போது ஜியோ அதன் அதிரடியை காட்டியுள்ளது.!

ஏர்டெல், வோடோபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்கள் தொடர்ச்சியான முறையில் ஜியோவிற்கு எதிரான போட்டி திட்டங்களை அறிமுகம் செய்ததின் விளைவாய் ஜியோ அதன் ட்ரிபிள் கேஷ்பேக் சலுகையை அறிவித்து இதர டெலிகாம் நிறுவனங்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இந்த புதிய கேஷ்பேக் சலுகையின் கீழ் ஜியோ ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.399/- அல்லது அதற்கு மேலான ரீசார்ஜ்களை நிகழ்த்துவதின் மூலம், அதிகபட்சம் ரூ.2,599/- வரையிலான கேஷ்பேக் சலுகைகளை பெறலாம். இந்த பிரத்தியேகமான ஜியோ ப்ரைம் நலன்கள் 2017-ஆம் ஆண்டு நவம்பர் 10 முதல் 25 வரை மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.!

reliance jio cashback offers

எடுத்துக்காட்டுக்கு இந்த ட்ரிபிள் கேஷ்பேக் வாய்ப்பின் கீழ் ரூ.399/- ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.400/- மதிப்புள்ள கேஷ்பேக் வவுச்சர்கள் கிடைக்கும் மற்றும் ஜியோவின் வேலட் பங்குதாரர்களான அமேசான்பே, ஆக்சிஸ்பே, ப்ரீசார்ஜ், மொபைவிக்,பேடிஎம் மற்றும் போன்பி போன்ற முன்னணி டிஜிட்டல் கட்டண பணப்பரிமாற்றங்களின் கீழ் ரீசார்ஜ் செய்ய உடனடியாக ரூ.300/- கேஷ்பேக் சலுகை கிடைக்கும்.

இந்த கேஷ்பேக் சலுகையானது மூன்று பிரிவுகளைக் கொண்டது : நவம்பர் 15 முதல் ரூ.400/- மதிப்புள்ள ஜியோ வவுச்சர் ஆனது (ரூ. 50 x 8) மைஜியோவில் கிடைக்கப்பெறும்; ஜியோவுடன் கூட்டணி கொண்ட வேலட் நிறுவனங்கள் உடனடியாக கேஷ்பேக்கை வழங்கி விடுவர்; மேலும் நவம்பர் 20, 2017 முதல் இ-காமர்ஸ் வவுச்சர்கள் கிடைக்கும்.

இந்த ஜியோ ப்ரைம் நன்மைகள் ஆனது ப்ரைம் உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள முதல் பிரத்தியேக தொகுப்பாகும். இந்த சலுகைகள் ஏற்கனவே ஜியோ ப்ரைம் உறுப்பினர்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பு கட்டண சலுகைகளுக்கு அப்பாற்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜியோ ப்ரைம் என்னது ஆண்டுக்கு ரூ.99/- கட்டணத்தின் கீழ் கிடைக்கும் ஜியோ சந்தாவாகும். மேலும் பல டெலிகாம் அப்டேட் செய்திகளுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருக்கவும்.

ஜியோ புது ஆப்பர்

Related Posts