அறிமுகம் ஆனது ஜியோ ஜிகாபைபர் மற்றும் ஜிகாடிவி சேவையை – #jiogigafiber #JiogigaTV

Reliance Jio Launched Its High Speed ​​Broadband Service Jio Gigafiber And GigaTV

ஜியோ ஜிகா பைபர் – jio gigafiber

பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் இந்தியா இன்னமும் பின்தங்கி உள்ளது. பிக்ஸட் பிராட்பேண்ட் சேவையில் சர்வதேச அளவில் இந்தியாவை முதல் 5 இடங்களுக்குள் கொண்டுவருவதற்கு ரிலையன்ஸ் நிறுவனம் உறுதி எடுத்துள்ளது. பைபர் இணைய சேவையில் ரூ.2.5 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளோம். பைபர் பிராட்பேண்ட் சேவையை இனி ஜியோஜிகாபைபர் என அழைக்கப்படும் முகேஷ் அம்பானி பேச்சு

இந்தியாவிலேயே தனியார் துறையில் அதிக ஜிஎஸ்டி வரி மற்றும் வருமான வரி  செலுத்தும் நிறுவனம் ரிலையன்ஸ். ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 22 மாதத்துக்குள்ளேயே 21.5 கோடியாக அதிகரித்துள்ளது. சர்வதேச அளவில் எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனமும் இந்த அளவுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை எட்டியதில்லை. ஜியோ இந்தியாவின் மொபைல் வீடியோ நெட்வொர்க்காக செயல்படுகிறது. ஒரு நாளைக்கு எங்களது வாடிக்கையாளர்கள் 219 நிமிடங்களுக்கு அதிகமாக இணைந்துள்ளனர்.

ஜியோ சேவை இந்தியாவின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு தாலுகாவில் ஏன் ஒவ்வொரு கிராமத்திலும் பரவியுள்ளது – முகேஷ் அம்பானி.கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ஜியோ பயன்படுத்துவோர் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து 21.5 கோடியாக உயர்ந்துள்ளது. ஜியோ அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து இணைய பயன்பாடு 125 கோடி ஜிபியிலிருந்து  240 ஜிபியாக அதிகரித்துள்ளது.

ஜியோஜிகாபைபர்

* ஜியோஜிகாபைபர் சேவையை பெறுவதற்கு மைஜியோ மற்றும் ஜியோ.காம் மூலம் பதிவு செய்யலாம்.

* இந்தியாவில் 1,100 நகரங்களில் ஜியோஜிகாபைபர் சேவை தொடங்கப்பட இருக்கிறது.

* ஆனால் இந்தியா முழுவதும் டிஜிட்டல் தொழில்நுட்ப இணைப்பை ஏற்படுத்த ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

* இந்த ஆண்டு 7,500 ரீடெய்ல் ஸ்டோர்கள் அமைக்கப்படும்

“ஜியோஜிகா பைபர் திட்டத்தின் மூலம் 5 கோடி வீடுகளுக்கு இணைய இணைப்பு வழங்கமுடியும். 2025-ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை இருமடங்காக்க இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

ஜியோஜிகா செட்-டாப் பாக்ஸ்

ஜியோபோன்2 -வைத் தொடர்ந்து இஷா அம்பானியும் ஆகாஷ் அம்பானியும் இணைந்து ஜியோ ஜிகா செட்-டாப் பாக்ஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.600+ டிவி மட்டும் ஆடியோ வீடியோ 4கே தொழில்நுட்பத்தில் தியேட்டர் அனுபவத்தை இந்த செட்-டாப் பாக்ஸ் மூலம் பெறமுடியும். இந்தியாவின் உள்ள பல்வேறு மொழிகள் மூலம் இந்த வாய்ஸ் கமாண்ட் கொடுக்கும் சேவையும் இந்த செட்-டாப் பாக்ஸில் உள்ளது.