வாட்ஸ் அப்பில் உங்களை பிளாக் செய்தவர்களை எப்படி கண்டுபிடிப்பது?


இந்த வாட்ஸ் அப்பில் உங்களை ஒருவர் பிளாக் செய்து இருக்காரோ என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உங்களை ஒருவர் பிளாக் செய்து விட்டால் நேரடியாக நீங்கள் கண்டுபிடிக்க இயலாது. ஆனால் நான்கு வழிகளில் இதை கண்டுபிடிக்கலாம்.

1. பிளாக் செய்த நபரின் last seen மற்றும் online போன்ற விவரங்கள் தெரியாது. ஆனால் இதை மட்டும் வைத்து பிளாக் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை முடிவு செய்ய முடியாது. ஏனென்றால் இப்போது last seen மற்றும் online மறைக்க privacy settings ல் வழி இருக்கிறது.

2. உங்களை பிளாக் செய்தவருக்கு ஏதேனும் ஒரு மெசேஜ் அனுப்பினால் ஒரு டிக் மட்டுமே தெரியும். அதாவது வாட்ஸ் அப்சர்வருக்கு உங்கள் மெசேஜ் சென்றடைந்து விட்டது, குறிப்பிட்ட நபருக்கு சென்றடையவில்லை. இதை வைத்து உறுதியாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டு உள்ளீர்கள் என்பதை சொல்லிவிடலாம்.

3. உங்களை பிளாக் செய்தவர்களின் profile படம் உங்களுக்கு தெரியாது அல்லது அவர் அப்டேட் செய்த படம் உங்களுக்கு தெரியாது. இதை வைத்து உறுதியாக நீங்கள் பிளாக் செய்யப்பட்டுள்ளதை அறியலாம்.

4. பிளாக் செய்த நபருக்கு வாட்ஸ் அப்மூலம் கால் செய்தால் அவருக்கு ரிங் போகாது.

இந்த நான்கு வழிகளில் உங்களை பிளாக் செய்தவர்களை நீங்கள் கண்டறியலாம்.

You may also like...