தொழில் பயன்பாட்டிற்கு வருகிறது புதிய வாட்ஸ் அப் செயலி – முற்றிலும் இலவசம்

வியாபார பயன்பாட்டிற்காக புதிய அப்ளிகேஷனை வாட்ஸ் ஆப் வெளியிடது


இந்த ஆப் முழுக்க முழுக்க வியாபார பயன்பாட்டிற்காக பயன்படுத்தப்படும். இந்தியாவில் இருக்கும் சிறிய நிறுவனங்கள் அனைத்தும் இதை பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது. வியாபாரம் ஆரம்பிக்கும் விருப்பம் உள்ள அனைவரும் இதை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

இந்த அப்ளிகேஷன் மூலம் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகவல்கள் அனுப்பலாம். இதற்கு பணம் வசூலிக்கப்படாது. அதேபோல் தங்கள் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, மாற்றங்கள் என்ன என எல்லாமே இந்த ஆப் மூலம் அனுப்பப்படும். வாட்ஸ் ஆப் போல டவுன்லோட் செய்து அக்கவுண்ட் ஓபன் செய்தால் போதும்.

இதனால் வாடிக்கையாளர்களுக்கும் நிறைய பயன் இருக்கிறது. பட முன்பதிவு, நிகழ்ச்சி முன்பதிவு, பொருட்களின் விலை, தள்ளுபடி எல்லாம் இனி இந்த ஆப் மூலம் நமக்கு அனுப்பப்படும். இதனால் கூகுளில் தேவை இல்லாமல் தேடி நேரத்தி வீணடிக்க வேண்டியதில்லை. பல நாள் கஸ்டமர்களுக்கு சிறப்பு தகவல்களும் அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.

இதன் மூலம் உங்களுக்கு எல்லோரும் தகவல் அனுப்ப முடியாது. உங்களுடைய எண் இருக்கும் நபர்கள் மட்டுமே உங்களுக்கு மெசேஜ் அனுப்புவார்கள். ஆனால் அவர்களை தேவைப்பட்டால் நீங்கள் பிளாக் செய்து கொள்ள முடியும். இது மிகவும் பாதுகாப்பானது என்று கூறப்பட்டு இருக்கிறது.

You may also like...