வைரலாகி வரும் காமெடி நடிகை வித்யுலேகாவின் ஸ்லிம் கவர்ச்சி போட்டோ

Viral On Comedy Actor Vidyu Raman Slim Hot Photo in internet

தமிழில் பல படங்களில் காமெடியான வேடங்களில் நடித்த வித்யுலேகா ராமன், தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி விட்டார். இதையடுத்து அவரது கவர்ச்சி புகைப்படத்தை வைரலாக பரவி வருகிறது.

அஜித் நடித்த வீரம், விஜய நடித்த ஜில்லா, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க உள்ளிட்ட பல படங்களில் காமெடி நடிகையாக நடித்துள்ளார் வித்யுலேகா. இவர் நடிகர் மோகன் ராமின் மகள்.

கடந்த 2012-ஆம் ஆண்டு வெளிவந்த கௌதம் மேனனின் ‘நீ தானே என் பொன்வசந்தம்’ படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்தில் வந்த ‘தீயா வேலை செய்யனும் குமாரு’ படத்தில் நடிகர் சந்தானத்துக்கு ஜோடியாக நடித்தார்.

மிகவும் குண்டாக இருந்த இவர் சில காலமாக படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்துவிட்ட நிலையில், தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒரு நடிகை காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கும் போது மக்கள் அவரை கவர்ச்சியாக பார்க்கவோ, உணரவோ முடியாது என்று பதிவிட்டுள்ளார்.

கவர்ச்சி உடையில் இருக்கும் வித்யுலேகாவின் அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

You may also like...