கணவன் கள்ள தொடர்பு வச்சுருந்தா மனைவியும் கள்ள தொடர்பு வச்சுகளாமா?

Lakshmi – Tamil Short Film

Short film Lakshmi is the hot topic in social media. Watch it, you won’t get disappointed.

 

Presenting “Lakshmi” – Tamil Short Film ; Starring Lakshmi Priyaa Chandramouli, Nandan, Leo in lead roles. Directed by Sarjun KM & Music by Sundaramurthy KS. LAKSHMI Cast : Lakshmi Priyaa Chandramouli, Nandan, Leo Sivadass, Master Mithun, Sasi A Short by Sarjun KM Cinematography – Sudarshan Srinivasan Music – Sundaramurthy KS Sound Design – Dhanush Nayanar Audiography – Anand Menon (Four Frames Sound Company) Art – Kamal Female Voice – Sri Radha Bharath Male Voice – Sarjun KM Direction Team – Karthik Ramakrishnan, Sathish Cinematography Team – Hari, Anthony, Sasi Colourist – Goutham R Shankar (Ra Effects) Title Animation – Sandhya Prabhat Publicity Designs – Smriti Chiwdhury Dubbing Theatre – Sound Parti Studios Subtitling – BeatRoute Promotions – Shiyam (Conzept Note) Produced by – I B Karthikeyan Studio – Big Print Pictures

 

சர்ச்சையை கிளப்பியிருக்கும் ‘லக்ஷ்மி’ குறும்படம்- வீடியோ

குறும்படம் லட்சுமியை பார்ப்பவர்களால் நிச்சயம் நெகிழாமல் இருக்க முடியாது. லட்சுமி என்கிற குறும்படம் நன்றாக இருக்கிறது, சமூக வலைதளங்களில் அதை பற்றியே பேசுகிறார்கள் என்று எங்கள் எடிட்டர் கூறினார். முதலில் படத்தை பார்க்கத் தோன்றவில்லை. பின்பு என்ன தான் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள பார்த்தேன்.

லட்சுமி மனித உருவில் இருக்கும் ஒரு எந்திரம் என்பதை இயக்குனர் அழகாக காட்டியுள்ளார். தன்னை வருத்தி உழைத்தாலும் அந்த பாவிப்பய புருஷன் வாயில் இருந்து ஒரு வார்த்தை பாராட்டு வரவில்லை.

உழைத்து டயர்டாகி தூங்கும் மனைவியை எழுப்பி உறவு கொள்ளும் கணவன் அவன் தேவை முடிந்ததும் தூங்கிவிடுகிறான். அதிருப்தியை லட்சுமியை தன் கண்களில் மட்டுமே காட்டுகிறாள்.

வீட்டையும் பார்த்துக் கொண்டு வேலைக்கும் சென்று மாடாக உழைக்கும் பெண்கள் கணவனிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒரு சின்ன பாராட்டு தான். எவ்வளவு வேலை செய்கிறாய் சான்சே இல்லை என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும் அவள் அசந்துவிடுவாள். ஆனால் பல கணவன்களுக்கு அதை சொல்ல மனம் வருவது இல்லை.

வீட்டிலும், அலுவலகத்திலும் வேலை செய்வது மனைவியின் கடமை, அதற்கு எதற்கு பாராட்ட வேண்டும் என்பது பல கணவன்களின் எண்ணம். பாராட்டித் தான் பாருங்களேன் அவள் இன்னும் கூடுதலாக பெருமகிழ்ச்சியுடன் வேலை செய்வாள்.

ரயிலில் வந்த இளைஞனின் பாராட்டைக் கேட்டுத் தான் நெகிழ்ந்து போனாள் லட்சுமி. தவறு செய்ய வேண்டும் என்று எந்த பெண்ணும் நினைப்பது இல்லை என்பதை ஆண்கள் புரிந்து கொள்ள வேண்டும். குறும்படத்தை பார்த்து கண்கள் கலங்கியது. வாழ்த்துக்கள் இயக்குனரே…