‘கணவனின் நெருங்கிய நண்பனுடன்…’

#My Story : It is Better to be Separated, Than Cheating in Relationship!

எனது கணவரின் நெருங்கிய தோழருடன் இரண்டு வருடங்களாக தொடர்பில் இருந்தேன். அவர்கள் இருவரும் பள்ளிக் காலத்தில் இருந்து நெருங்கிய நண்பர்கள். நண்பர்கள் என்பதை காட்டிலும், சிறந்த சகோதரர்கள் போலதான் பழகி வந்தார்கள். என் கணவர் பெயர் ராஜேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

அவர் பெரிதாக சமூகத்துடன் இணைந்து பழக மாட்டார். அவரது நண்பர் பெயர் ஆர்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ராஜேஷிற்கு நேரெதிர் பாத்திரம் கொண்டவர் ஆர்யா. என்னுள் எப்போதுமே ஆர்யா மிகவும் கேளிக்கையான, நகைச்சுவையூட்டும் நபராகவே கண்டு வந்தேன். ஆர்யா மீது அப்போது எனக்கு பெரிதாக எந்தவித உணர்வும் இல்லை. நான் சிறந்த இல்லத்தரசியாக தான் இருந்தேன்…

ஒரு நாள் மதியம் பொதுவாக ஏதோவொரு விஷயம் குறித்து நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் ஆர்யா என் மீது ஈர்ப்பு கொண்டுள்ளான் என்பதை நான் புரிந்துக் கொண்டேன்.

அந்த சிறு கலந்துரையாடல் என்னுள் ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தியது. எனக்கு கனிவாகவும், குழந்தையிடம் மிக அன்பாக பழகும் ராஜேஷ். ஆயினும், ஆர்யா மீதான ஒருவித அலைகள் எழுவதை என்னால் தவிர்க்க முடியாமல் போனது.

உண்மையை சொல்ல வேண்டுமானால், எனது கணவரை வெறும் பணத்திற்காக தான் திருமணம் செய்துக் கொண்டேன். பிறகு தான் அவர் மீது காதல் கொண்டேன்.

அதன் பிறகு இல்லற வாழ்வின் பயணத்தில் அவர் மீது உண்மையான அக்கறையும் கொண்டிருந்தேன். ஆர்யா எங்களுக்குள் நுழையும் முன் வரை எங்களுக்குள் இதில் எந்த ஒரு மாற்றமும் எழவில்லை.

கொஞ்சம், கொஞ்சமாக குறுஞ்செய்தியில் பேச துவங்கினோம். ராஜேஷ்க்கு இது குறித்து எந்த ஒரு சந்தேகமும் எழவில்லை. நானும் ஆர்யாவும் மெல்ல, மெல்ல நெருக்கமானோம். ஆர்யா, அவனது வாழ்வில் நடந்த இரகசியங்கள் எல்லாம் என்னிடம் பகிர துவங்கினான். வேடிக்கையாக துவங்கியது இந்த உறவு.

ஒரு நாள், எனக்கு அவன் மீது ஈர்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பினான். ஆம்! என்பதை தவிர வேறு என்ன கூறுவது என எனக்கு தெரியவில்லை.

அப்போது தான் வெறும் குறுஞ்செய்தி உறவாக இருந்ததை, எல்லை மீறி கடத்தி சென்றோம். நாங்கள் எதற்காக இந்த குறுஞ்செய்தி பயணத்தை துவக்கினோம் என்பதை அன்று தான் உணர்ந்தோம். அவன், என் மீதான கனவுகள், ஆசைகள் எல்லாம் கூற துவங்கினான். இந்த ஆசை பரிமாற்றம் எங்களுக்குள் எழுந்த அலைகளை உயர எழும்ப செய்தது.

ஆர்யா தினமும் எங்கள் வீட்டுக்கு வருவான். என் குழந்தையும் அவன் மீது அளவுகடந்த அன்பு கொண்டிருந்தான். என் குழந்தையிடம் என்ன பேச வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என அனைத்தும் அறிந்திருந்தான் ஆர்யா.

குறுஞ்செய்தியை கடந்து, தினமும் அழைப்புகள் அதிகரிக்க ஆரம்பித்தது. எங்களுக்குள் இருந்த கனவுகள் விரிய துவங்கியது. ஒருவேளை நாங்கள் இருவரும் திருமணம் செய்து, கணவன் – மனைவியாக வாழ்ந்தால் எப்படி இருக்கும் என்பது குறித்த பேச்சுகள் அதிகரித்தன. ராஜேஷ் உடனான வாழ்க்கையை விட, ஆர்யாவுடனான வாழ்க்கை தான் மகிழ்ச்சியானதாக மனம் உணர்ந்தது.

எங்கள் திருமணம் வெறும் பணத்திற்காக நடந்தது. அதில் நடந்த தவறுகள் என்னென்ன என்று முற்றிலும் எங்கள் திருமண வாழ்க்கை பற்றிய தவறுகளை மட்டுமே ஆர்யாவிடம் கூற துவங்கினேன். ஆர்யா என்னுடன் இன்னும் நெருக்கமாக பழக, பேச இது கருவியானது.

கணவன் மனைவியாக பாவித்து பேசிக் கொண்டிருந்த எங்கள் உறவு, கணவன் – மனைவியாகவே மாறியது. எங்கள் இருவருக்குள்ளான தாம்பத்திய உறவு அதிகரிக்க துவங்கியது. என்னால் இதை அப்போது தவறாக கருத இயலவில்லை. என்னுள் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும் ஏற்படவில்லை.

ராஜேஷுடனான இல்வாழ்க்கை மற்றும் தாம்பத்தியம் மோசமான நிலைக்கு சென்றது. தினமும் புன்னகையை மலரவிட்ட ராஜெஷ்க்கு, அப்போது தான் சந்தேகம் எழ ஆரம்பித்தது. ஆனால், அது குறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்க ராஜேஷ்துணிவின்றி இருந்தார்.

துணிவு என்பதை காட்டிலும், என்னை சந்தேகிக்க ராஜேஷால் முடியவில்லை என்பது தான் உண்மை.

ஆர்யாவுடனான இந்த உறவு முற்றிலும் ஒரு நாள் முடிந்து போனது. ஒரு நாள் ஆர்யா எனக்கு கால் செய்வதை நிறுத்திக் கொண்டான். நான் தனிமையாக உணர துவங்கினேன். சந்தோஷம் குறைந்தது, என் மனம் முழுக்க குழப்பம் நிறைந்திருந்தது. அவன் என் வாழ்வில் இனி இல்லை என்ற நிலை உருவானது.

ஆனால், என்னுள் ஆர்யா குறித்த எண்ணம் ஒரு நாளும் எழாமல் இல்லை. வருடங்கள் நீடித்த உறவு ஒரு நாளில் முடிந்ததை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதற்கான காரணம் அறியாதிருந்தது என்னுள் கோபம் அதிகரிக்க செய்தது. இந்த கோபத்தை எல்லாம் ராஜேஷ் மீதுதான் காட்டினேன்.

ராஜேஷ் மீதான கோபத்தால், பழிவாங்க நினைத்தேன். அவரது வேறு தோழருடனும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் உறவில் ஈடுபட்டேன். உண்மையில் என்னை நானே அழிக்கும் கருவியாக மாறினேன். பணத்திற்காக நடந்த திருமணம் தானே இது.

எனக்கு கிடைத்த ஒரு காதலும் (தவறானது எனிலும்) இழந்தேன். இப்படி அவரை அழிக்கிறேன் என என்னையும் அழித்துக் கொள்கிறேன். இதற்கு நான் விவாகரத்து பெற்று விடலாம்.

எனது தவறுகளால், எனது குழந்தை பாதிக்கப்படுவதை என்னால் ஏற்க முடியவில்லை. இப்போது குழப்பங்கள் மட்டுமே நிறைந்ததாக மாறி போயிருக்கிறது எனது வாழ்க்கை.

இது எனது ஆரோக்கியத்தை சீரழிக்கிறது என்பதை காட்டிலும், எனது கணவரின் மனநிலையையும் பாதிக்கிறது. பிடிக்காத உறவில் இணைந்திருந்து, அவரை ஏமாற்றுவதை காட்டிலும். மகிழ்ச்சியாக பிரிந்து, அனைவரையும் நிம்மதியாக வாழ விடலாம். பணத்தை காரணமாக கொண்டு இணைந்த உறவில் ஒருவேளை எனக்கான காதல், நான் காணாத காதல் ஆர்யாவிடம் இருந்து கிடைக்காமல் போயிருந்தால்.

அதே அக்கறையுடன் ராஜேஷுடன் வாழ்ந்திருப்பேன். இன்று இப்படி குழம்பி தவித்திருக்க மாட்டேன். எந்த உறவாக இருப்பினும், பணத்திற்காக இணைந்தால், அதன் முடிவு எப்படியானதாக இருக்கும் என்பதற்கு எனது வாழ்க்கை ஒரு உதாரணம்.

You may also like...