நிர்வாண செல்ஃபி எடுத்து பிரச்சனையில் சிக்கும் பெண்கள்

Girls won’t take nude selfies after seeing this thoughtful video

நிர்வாணமாக செல்ஃபி எடுப்போர் இந்த வீடியோவை பார்த்த பிறகு நிச்சயம் அப்படி செய்ய மாட்டார்கள். உலக மக்களில் பலர் செல்ஃபி மோகம் பிடித்து திரிகிறார்கள்.

காதலிகள் நிர்வாணமாக செல்ஃபி எடுத்து அதை காதலனுக்கு அனுப்பி வைக்கிறார்கள். அப்படி அனுப்பி வைக்கப்படும் நிர்வாண செல்ஃபிக்களாலேயே அந்த பெண்கள் பிரச்சனையில் சிக்குகிறார்கள்.

இந்நிலையில் தான் நிர்வாண செல்ஃபி எடுத்து பிரச்சனையில் சிக்கும் பெண் பற்றிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. வீடியோவின் விபரம் வருமாறு,

இளம்பெண் ஒருவர் குளியலறைக்கு சென்று தனது காதலனுக்கு போன் செய்கிறார். காதலன் கேட்டுக் கொண்டதன்படி நிர்வாணமாக செல்ஃபி எடுத்து அதை வாட்ஸ்ஆப் மூலம் அனுப்புகிறார்.

அவசரத்தில் காதலனுக்கு பதில் அப்பாவுக்கு அந்த நிர்வாண செல்ஃபியை தவறுதலாக அனுப்பியதை பார்த்து அந்த பெண் அதிர்ச்சி அடைகிறார்.

மகளின் நிர்வாண செல்ஃபியை பார்த்த தந்தை அவரை அழைத்து கண்டிக்கிறார். இல்லையப்பா என் தோழிக்கு எனது உள்ளாடையை காட்டவே அந்த புகைப்படத்தை எடுத்தேன் என்கிறார் மகள். உள்ளாடையா, பொய் சொல்லாதே என்கிறார் அப்பா.

இரு இரு உனக்கு ஓவரா செல்லம் கொடுக்கிற உங்க அம்மாவுக்கு இந்த செல்ஃபியை அனுப்புகிறேன் என்று கூறிக் கொண்டே அப்பா அந்த புகைப்படத்தை வாட்ஸ்ஆப்பில் அனுப்புகிறார்.

அப்பா தனது மகளின் நிர்வாண செல்ஃபியை தவறுதலாக தான் கடை வைத்துள்ள மார்க்கெட்டில் தொழில் செய்யும் நபர்கள் அடங்கிய வாட்ஸ்ஆப் குரூப்பிற்கு அனுப்பிவிட்டார். மகளின் மானத்தை அப்பாவே வாங்கிவிட்டார்.

காதலனை திருப்திபடுத்த எடுக்கப்பட்ட ஒரு நிர்வாண செல்ஃபியால் இளம்பெண்ணின் மானம் காற்றில் பறந்துவிட்டது. அப்படிப்பட்ட நிர்வாண செல்ஃபி எடுப்பது தேவையா பெண்களே? சிந்தித்து பாருங்கள்.

 

இந்த வீடியோவை பார்த்த பிறகு பெண்கள் யாரும் நிர்வாணமாக செல்ஃபி எடுக்க மாட்டாங்க!

உங்கள் கருத்துக்களை கீழே கமெண்ட் பண்ணவும் … பிடித்திருந்தால் share செய்தவும் ..

You may also like...