மல்லிகைப் பூவில் மறைந்திருக்கும் மருத்துவம் பற்றி தெரியுமா?

Jasmine flower medical benefits

மணக்கும் மல்லிகைப்பூவின் ரகசியங்களும்… மருத்துவ அதிசயங்களும்…

மல்லிகை பூ சூடாத பெண்ணே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்லலாம். மல்லிகையின் வாசம், மென்மை என தமிழ் சினிமா பாடல் வரிகளிலும் மிக முக்கிய இடம் வகிக்கிறது.

தமிழ் இலக்கியத்தில் முல்லை எனச் சுட்டி காட்டப்படும் இது ஒரு வகை வன மல்லிகை. தற்போது குண்டு மல்லி, அடுக்குமல்லி மற்றும் இருவாச்சி எனப் பல வகை மல்லிகைப் பூக்களைக் காணலாம். ஃபிலிப்பைன்ஸ் நாட்டில் அது தேசிய மலராகும்.

இந்த மல்லிகைக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு…

உங்கள் வயிற்றில் பூச்சி இருந்தால் உங்கள் உடல் மெலிவடைவது மட்டுமின்றி உபாதைகளும் உண்டாகும், சருமத்தில் வெள்ளைத் திட்டுக்கள் காணப்படும். அப்படியானவர்கள் 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள கொக்கிக் புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.

சிலருக்கு மல்லிகை வாசனை தலைவலியை ஏற்படுத்தும் என நாம் அறிந்திருப்போம், ஆனால் தலைவலியை குணமாக்கும் குணம் மல்லிகைக்கு உள்ளது என்பது நம்மில் பலருக்கும் தெரியாது. தலைவலி ஏற்படும் போது, சில மல்லிகைப் பூக்களை கையில் வைத்து கசக்கி அதனை தலையில் பத்திடுவது போல தேய்த்துவிட்டால் தலைவலி காணாமல் போய்விடும்.

மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடுங்கள் மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் ஓடிவிடும்.

அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.

மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும்.