மாடல் பெண்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் தெரியுமா?

The Real Life of Fashion Models Breaking All The Stereotypes

பொதுமக்களுக்கு மாடலிங் செய்யும் பெண்கள் மீது தவறான கண்ணோட்டம் இருக்கும். அவர்கள் அரைகுறை ஆடையுடன் தோன்றுபவர்கள் தானே, கூச்சமற்று இப்படி ஒரு தொழில் செய்ய வேண்டுமா? என கேள்வி கேட்பவர்களும் உண்டு. மாடலிங் செய்வோர் தங்கள் உடலை விற்க தயங்க மாட்டார்கள்.

போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பார்கள். அவர்களுக்கு பணமும், ஆடம்பர வாழ்க்கையும் தான் வேண்டும் என கருத்து நம்முள் இயல்பாகவே ஆழமாக புதைந்துவிட்டது. நாம் பார்க்கும் படங்கள், விளம்பரம் அது சார்ந்த ஆடம்பரம் அனைத்தும் ஒரு மாயை. அழகாக இருந்தால் மட்டும் மாடலிங் செய்துவிட முடியாது. மாடலிங் செய்ய ஓர் உடல் மொழி வேண்டும்.

போட்டோஜெனிக் ஃபேஸ் வேண்டும். சிலர் நேரில் பார்க்க அழகாக இருப்பார்கள். ஆனால், போட்டோவிலோ, வீடியோவிலோ அவர்களது முகம் எடுப்படாது. போலீஸ் வேலைக்கு ஆள் எடுப்பதை போலவே, ஃபேஷன் வேலைக்கு ஆள் எடுப்பதற்கும் பல கடினமான தேர்வுகள் இருக்கின்றன. உடல் ரீதியாக, மன ரீதியாக தயாரானால் மட்டுமே தான் ஃபேஷன் உலகில் வேலை செய்ய முடியும். அரைகுறையுடன் தோன்றுவது மட்டுமே ஃபேஷன் அல்ல.

ஒரு பொருளை, ஒரு தொழிலை தூக்கி நிறுத்தும் முதுகெலும்பு விளம்பரம். அந்த விளம்பரத்தை தாங்கிப் பிடிப்பதில் ஃபேஷன்னுக்கு ஓர் முக்கிய பங்குண்டு. நாம் பர்ஃபியூம் மற்றும் உள்ளாடை விளம்பரங்களில் மட்டும் தான் கவர்ச்சி இருக்கிறதா? சோப்பு விளம்பரத்தில் இருந்து செருப்பு விளம்பரம் வரை கவர்ச்சி இல்லாத விளம்பரங்களே இல்லை.

காலப்போக்கில் ஃபேஷன் என்பதன் பொருள் கவர்ச்சி என்றே மாறிவிட்டது. ஆகையால், அத்துறையில் மாடலிங் செய்யும் பெண்களும் கவர்ச்சியானவர்கள் தவறு செய்ய எதற்கும் தயங்கமாட்டார்கள் என்ற கண்ணோட்டம் நம்முள் அதிகரித்துவிட்டது. விளம்பரங்களில், படங்களில், ஃபேஷன் ஷோக்களில் நாம் காணும் மாடல் அழகிகள், அவர்களது நிஜ வாழ்வில் எப்படி இருப்பார்கள் தெரியுமா? ஒருவேளை இதை அறிந்தால். அவர்களும் நம்மளை போன்ற ஒருவர் தான் என்பதை நாம் மிக எளிதாக புரிந்துக் கொள்வோம்…

இவர் பெயர் பல்லவி தாஸ். பாந்த்ரா பகுதியில் வசித்து வருகிறார். பாந்த்ராவின் காய்கறி, பழ சந்தையில் தனக்கு வேண்டிய பொருட்களை பல்லவி தாஸ் வாங்கிக் கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட படம் இது.
பல்லவி நம்மளை போலவே மிக இயல்பான வாழ்க்கையை தான் வாழ்ந்து வருகிறார். அவர் நான்கு புறமும் கண்ணாடி பதித்து, ஏ.ஸி அறைக்குள் பதப்படுத்தி வைத்து விற்கப்படும் இடங்களில் பழங்கள் வாங்கவில்லை. பாந்த்ராவில் இருக்கும் ஓர் சாதாரண சந்தையில் தனக்கு தேவையான மாதுளைப் பழத்தை வாங்கிக் கொண்டிருக்கிறார். பல்லவி தாஸின் வாழ்வில் கவர்ச்சி இல்லை.

இவர் பெயர் சோனா கோல்டார். பாந்த்ராவில் இருக்கும் மீன் சந்தியில் இவர் மீன் வாங்கிக் கொண்டிருக்கிறார். என்னையும், உங்களையும் போலவே, தனக்கான விலை வரும் வரை பேரம் பேசி மீன் வாங்கிக் கொண்டிருக்கிறார்.

சோனா வங்கிக் கொண்டிருக்கும் மீன்கள் ஒன்றும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மீன்கள் அல்ல. இந்த மீன்கள் வாயில் நுழையாத விலையுர்ந்தவையும் அல்ல. கிலோ, ரூ. 50 – 100 க்கு நாம் வாங்கும் அதே சாதாரன மீன். சோனாவின் வாழ்வில் ஆடம்பரம் இல்லை.

பாந்த்ராவில் வசித்து வரும் மற்றுமொரு மாடல் மரைட் வால்சன். ரோட்டில் திரிந்துக் கொண்டிருந்த இரண்டு பூனைகளை தனது வீட்டில் பாதுகாத்து வளர்த்து வருகிறார்.

நாம் எப்படி செல்லப்பிராணிகளை விரும்பி அன்புடன் வளர்க்கிறோமோ, அதே போல தான் பல்லவியும் தான் தெருவில் இருந்து எடுத்து வந்த பூனைகளை மிகவும் அன்புடன் வளர்த்து வருகிறார். ஃபேஷன் துறையில் வேலை செய்வதாலோ, மாடலாக இருப்பதாலோ, அவருள் இருக்கும் அன்பு மாறிடவில்லை. வால்சனின் வாழ்வில் கலப்படம் இல்லை.

தனது வீட்டில், தன் செல்லமான பாட்டி மற்றும் அம்மாவுடன் இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் நம்ரதா ஷெத். கொஞ்சம் ரிலாக்ஸாக சிரித்து பேசி மகிழ்ச்சியுடன் உட்கார்ந்திருக்கிறார்.
உலகின் சிறந்த ஹாபி என போட்டப்படுவது புத்தக வாசிப்பு. உங்களை போலவே இவருக்கும் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இருக்கிறது. தனது ஓய்வு நேரத்தில் தனக்கு பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை வாசித்து, அம்மா, பாட்டி, உறவினருடன் பேசி மகிழ்ந்து வாழ்ந்து வருகிறார் நம்ரதா ஷெத். நம்ரதா ஷெத்திற்கு புகை, போதை பழக்கமோ இல்லை.

ஒரு சாதாரண உணவகத்தில் தனது நண்பருடன் அமர்ந்து ஸ்நாக்ஸ் மற்றும் தேநீர் அருந்தி வருகிறார் டயானா.

டயானா தான் டீ குடிக்க வேண்டும் என்றால் அருகே இருக்கும் சாதாரண டீக்கடைக்கோ, சாதாரண உணவகத்திற்கோ தான் செல்கிறார். சிங்கிள் டீ குடிக்க ஆயிரம் ரூபாய் செலவழித்து அவர் ஸ்டார் ஹோட்டல்களுக்கு செல்வதில்லை. டயானாவின் வாழ்விலும் ஆடம்பரம் இல்லை.

வேலை முடித்த பிறகு, ஓய்வு நேரத்தில் தனது வீட்டின் பால்கனி பகுதியில் நின்று புகைத்துக் கொண்டிருக்கிறார் அர்ஷியா அஹுஜா.

அர்ஷியாவின் பால்கனியில் இருந்து பார்த்தல் சில பறவைகள் பறப்பது தான் தெரியும். அரபிக்கடலோ, கடற்கரையோ, எழில்மிகு காட்சிகளோ தெரிவதில்லை. எப்படி நாம் அனைவரும் நமது வேலையை, தொழிலை முடித்துவிட்டு வீடு திரும்பிய பிறகு இயல்பு வாழ்க்கையை வாழ்கிறோமோ, அப்படி தான் சினிமா நட்சத்திரங்களும், மாடல் அழகிகளும். அவர்களுக்கும் நம்மை போலவே ஒரு இயல்பு வாழ்க்கை இருக்கிறது. இந்த படங்களை பார்த்தப் பிறகு, புகழ் தரும் துறையாயினும் மாடலிங் செய்பவர்களும் நம்மளை போலவே ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்பவர்கள் என்பதை நாம் அறியலாம்.

You may also like...