மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழ் மாணவி ! – அனுகீர்த்தி வாஸ்

Tamil Nadu College girl Anukreethy Vas crowned winner Femina Miss India 2018

‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகிக்கான போட்டி நேற்று மாலை மும்பையில் நடைபெற்றது. இதன் இறுதிச் சுற்றுக்கு 30 அழகிகள் தேர்வாகினர்.

அவர்களில் இந்திய அழகியாக தமிழகத்தின் சென்னையைச் சேர்ந்த அனுகீர்த்தி வாஸ் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். லயோலா கல்லூரியில் பி.ஏ. ஃப்ரெஞ்ச் படித்து வரும் 19 வயது அனுகீர்த்தி, ‘மிஸ் இந்தியா’ மகுடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இந்தியா பட்டம் வென்ற தமிழ்ப் மாணவி ! - அனுகீர்த்தி வாஸ் (1)

 

நடிப்பு, மாடலிங் என பல துறைகளில் இவர் திறமையுடன் இருப்பதால் அவருக்கு இந்த மகுடம் சுட்டப்பட்டுள்ளது.

இந்த வருட இறுதியில் உலக அழகி போட்டிக்கான தேர்வுகள் நடக்கும். அப்போதும், இந்தியா சார்பாக இவர் பரிந்துரை செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.