நரைமுடியை தவிர்க்க என்ன வழி?

How to avoid white hair

‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக் ‘தல’க்கு வேனும்னா நன்றாக இருக்கலாம். அதாங்க இளநரை…. இப்போதெல்லாம், 20 வயது இளைஞர்களுக்கே மிகச் சாதாரணமாக நரை முடி ஏற்படுகிறது. சிலருக்கு ஜீன் பிரச்சனை என்றாலும், சில உணவுகளாலும் இந்த நரை முடி உருவாகிறது.

சர்க்கரை: சர்க்கரையை மட்டுமே அதிகமாக சாப்பிடுவதாலும், அதிகமாக சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிடுவதாலும் நரை முடி சீக்கிரமாக உண்டாகிறது. மேலும் துரித உணவுகள், சோடா, பதப்படுத்தப்பட்ட குளிர்பானங்களை பருகுவதன் மூலமாகவும் நரை முடிகள் வருகின்றன.

விட்டமின் இ: நீங்கள் அதிகமான அளவு சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, அது விட்டமின் இ உடைய செயல் திறனை குறைக்கிறது. விட்டமின் இ என்பது முடி வளர்ச்சிக்கு மிக முக்கியமாக தேவையான ஒன்றாகும். இது புரோட்டினை உறிஞ்சவும் உதவுகிறது.

உடலில் சர்க்கரை ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டியது அவசியம். எனவே நீங்கள் அந்த சர்க்கரையை செயற்கையான பொருட்களில் இருந்து எடுக்காமல், இயற்கையாக கிடைக்கும் சர்க்கரையை எடுத்துக் கொள்ளலாம். இயற்கை சர்க்கரையானது சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பீட்ரூட், கேரட் போன்றவற்றில் இருந்து கிடைக்கிறது.

உப்பு என்பது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமான ஒன்று என்றாலும் கூட, இதனை அதிகளவு சேர்த்துக் கொள்வதை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நல்லது.

அஜினமொட்டோ என்பது உணவிற்கு சுவையளிப்பதற்காகவும், உணவின் சுவையை கூட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இது கடை உணவுகள், கேன்களில் அடைக்கப்பட்ட காய்கறிகள், சூப் போன்ற பல உணவுப்பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. இந்த அஜினமொட்டோ பல ஆரோக்கிய கெடுகளை விளைவிக்க கூடியதாகும்.

அதிகளவு விலங்கு கொழுப்புகளை உட்கொள்வதும் நரைமுடிக்கு காரணமாக அமையும். மீன் மற்றும் இறைச்சியில் இருந்து கிடைக்கும் இந்த விலங்கு கொழுப்புகளை அளவுடன் எடுத்துக் கொள்வதே நல்லது. மனிதனின் செரிமான மண்டலமானது சில வகையான விலங்கு புரோட்டினை எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. எனவே அவை நேரடியாக யுரிக் அமிலமாக மாறுகிறது. அதிகமாக யுரிக் ஆசிட் சுரந்தால் நரை முடி பிரச்சனை உண்டாகும்.

You may also like...