கவர்ச்சிப் புயல் சன்னி லியோன் தமிழில் மையம்… நேரடித் தமிழ்ப் படம் அறிவிப்பு!

Sunny Leone is going to be act as heroine in the Tamil film.

தமிழ் சரித்திரப் படத்தில் நடிக்கும் சன்னி லியோன்

தமிழில் உருவாகும் சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார் நடிகை சன்னி லியோன். இந்தப் படத்தை வி.சி.வடிவுடையான் இயக்குகிறார்.

ஆபாசப் படங்கள் மூலம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற சன்னி லியோன் தற்போது ஆபாசப் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு, பாலிவுட்டில் நடித்து வருகிறார்.

தமிழில் ஜெய் நடித்த ‘வடகறி’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியிருக்கிறார் சன்னி லியோன்.

தமிழில் உருவாகும் ஒரு சரித்திரப் படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் சன்னி லியோன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை, ‘தம்பி வெட்டோத்தி சுந்தரம்’, ‘பொட்டு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய வி.சி.வடிவுடையான் இயக்குகிறார். ஸ்டீவ்ஸ் கார்னர் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கிறார் பொன்ஸ் ஸ்டீபன்.

தென்னிந்திய கலாச்சாரங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப்படம், சரித்திரப்படமாக உருவாக இருக்கிறது. இதற்காக கத்திச்சண்டை, குதிரையேற்றம் உள்ளிட்ட கலைகளைக் கற்று வருகிறார் சன்னி லியோன். சன்னி லியோன் மீதான ஆபாசப் பட நடிகை என்கிற அடையாளத்தை இந்தப் படம் அடியோடு மாற்ற இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் கத்திச்சண்டை, குதிரையேற்றம் ஆகிய காட்சிகளில் சன்னி லியோன் நடிப்பதற்காக ஆந்திராவில் இருந்து மும்பைக்குச் சென்று சன்னிக்குப் பயிற்சி அளித்து வருகிறார் ஒருவர். இந்தப் படத்துக்காக 150 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார் சன்னி லியோன்.

இந்தப் படத்தில் 70 நிமிடங்களுக்கு கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம்பெறுகிறதாம். ‘பாகுபலி’ மற்றும் ‘2.O’ படங்களுக்கு கிராபிக்ஸ் செய்த நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. பிப்ரவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் நாசர், நவ்தீப் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோ யார் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.

You may also like...