மகளின் நடவடிக்கையை நினைத்து நடிகை ஸ்ரீதேவிக்கு பயம்

Sridevi daughter Jhanvi Kapoor

நடிகை ஸ்ரீதேவி தனது மகள்களை நினைத்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டுள்ளாராம். நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர். குஷியின் 17ஆவது பிறந்தநாளையொட்டி, இன்ஸ்டாகிராம் செயலியில், அவரின் புகைப்படத்தை வெளியிட்டார் ஸ்ரீதேவி.

மூத்த மகள் ஜான்வி தாய் வழியில் நடிகையாக, விரும்பி பயிற்சி எடுத்து வருகிறார். இதனால், பல்வேறு நிகழ்வுகளில், ஜான்வி பங்கேற்று வருகிறாராம். இரவு நேரத்தில், மகள்கள் பார்ட்டிக்கு சென்றால், அவர்கள் வீட்டுக்கு வரும் வரை, தூங்காமல் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருப்பது போன்று இருப்பதாக, ஸ்ரீதேவி தெரிவித்துள்ளார். மராத்தி படமான சாய்ரத் ஹிந்தி ரீமேக் மூலம் பொலிவூட்டில் ஜான்வி அறிமுகமாகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், அந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிப்பதாகத் தெரியவில்லை.

தனது மகள் ஜான்வியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைக்கிறேன் என்று கூறிவிட்டு, அது பற்றிக் கண்டுகொள்ளாமல் இருக்கும் இயக்குநர் கரண் ஜோஹார் மீது ஸ்ரீதேவி கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

You may also like...