ஆபாச பட நடிகையுடன் டேட்டிங் சென்ற ஆர்யா: தெரிந்து செய்றீங்களா, தெரியாமல் செய்றீங்களா?

ஆபாச பட நடிகையுடன் டேட்டிங் சென்ற ஆர்யா

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் ஆர்யாவை இம்பிரஸ் செய்து டேட்டிங் சென்றவர் ஆபாச பட நடிகை என்பது தெரிய வந்துள்ளது. வயது ஏறிக் கொண்டே போகும் ஆர்யாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் திடீர் என்று ஒரு நாள் ஒரு வீடியோவை வெளியிட்டு தன்னை மணக்க விரும்பும் பெண்கள் தனக்கு போன் செய்யுமாறு கூறினார். கடைசியில் பார்த்தால் அது கலர்ஸ் டிவியில் வரும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சிக்கு என்பது தெரிய வந்தது.
பட நடிகையுடன் டேட்டிங் சென்ற ஆர்யா
பல பெண்கள் விண்ணப்பித்தனர். அதில் 16 பெண்களை தேர்வு செய்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வைத்துள்ளனர். அந்த பெண்களுக்கு தினமும் ஒரு போட்டி நடத்தப்படுகிறது. போட்டியில் வெற்றி பெறும் பெண் ஆர்யாவை தனியாக சந்தித்து பேசும் வாய்ப்பை பெறுவார்.

வீடியோ எடிட்டர் என்று கூறி அகதா மேக்னஸ் என்ற பெண் எங்க வீட்டு மாப்பிள்ளை போட்டியில் கலந்து கொண்டுள்ளார். காதல் கடிதம் எழுதும் போட்டியில் வென்றார்.

காதல் கடிதம் எழுதும் போட்டியில் வென்ற அகதா ஆர்யாவுடன் டேட்டிங் சென்றுள்ளார். இந்நிலையில் அவர் ஆபாச படத்தில் நடித்தது தெரிய வந்துள்ளது.

அகதா பற்றிய உண்மை அறிந்த ஆர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக ஒரு பெண் தனக்கு விவாகரத்தாகிவிட்டதாக ஆர்யாவிடம் தெரிவித்தார். அதை ஆர்யா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அகாதா யார் என்பது ஆர்யாவுக்கு நிஜமாகவே தெரியாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இறுதிப் போட்டியில் வெல்லும் பெண்ணை ஆர்யா திருமணம் செய்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியா தவிர சிங்கப்பூர், மலேசியா, கனடா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் பெண்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

You may also like...