டான்ஸ் மாஸ்டர் சாண்டி முதல் செய்த வேலை என்ன தெரியுமா?


கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட மூலம் தனது டான்சால் ரசிகர்களை கவர்ந்தவர் சாண்டி. பின்னர் பாடல்களுக்கு கொரியோகிராப் செய்து வரும் சாண்டி தற்போது சுப்பர் ஸ்டார் ரஜினியின் காலா படத்தில் கொடியோகிராப் செய்கிறார்.

தற்போது பெரிய நடன பயிற்சியாளராக இருக்கும் சாண்டி இதற்கு முன்னால் என்னவாக இருந்தார் என்றால் மிகவும் ஆச்சரியமாகதான் இருக்கிறது.

ஒருவர் பெரிய ஆள் ஆகிறார் என்றால் அவருக்கு பின்னால் அவர் பட்ட கஷ்டங்கள் நிறைய இருக்கும். அப்படி ஒருவர் தான் சாண்டியும் இதற்கு முன்னால் திருவிழாகளில் ஆடும் ஓரு நபராக இருந்துள்ளார்.

அப்போது அவர் கால்கடுக்க 40 பாடல்கள் ஆடினாலும் அவருக்கு கிடைக்கும் சம்பளம் 250 ரூபாய் தானாம். பிறகு ஜெயந்தி மாஸ்டரிடம் சேர்ந்து படங்களில் பிரபலங்களுக்கு பின்னால் ஆட தொடங்கியுள்ளார்.

கடைசி வரிசையில் ஆடி வந்த அவரின் திறமையை கண்ட கலா மாஸ்டர் முன்னாடி வரிசையில் ஆட வைத்துள்ளார். பிறகு தான் மானாட மயிலாட ஷோவில் கலா மாஸ்டர் கொரியோகிராப் செய்ய வாய்ப்பு அளித்துள்ளார்.

You may also like...