வாய்ப்புக்காக படுக்கை: சூர்யா, கார்த்தி ஹீரோயின் ஓபன் டாக்

சினிமாவில் வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் பற்றி பேசியுள்ளார் ரகுல் ப்ரீத் சிங்.
Rakul Preet

நடிகை ரகுல் ப்ரீத் சிங்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங் தற்போது தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள பெங்களூர் சென்ற அவர் பேட்டி அளித்துள்ளார்.

நான் தெலுங்குகார பெண்ணாகிவிட்டேன். நான் மும்பையில் இருந்தாலும் என் வாயில் முதலில் வருவது தெலுங்கு தான். அது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. நான் தெலுங்கை அதிகம் பயன்படுத்துவது என் ஹைதராபாத் நண்பர்களுக்கே வியப்பாக உள்ளது.

நான் இயற்கையாகவே கடின உழைப்பாளி. நான் எங்கு வேலை செய்கிறேனோ அவர்கள் பேசும் மொழியை கற்பது என் கடமை. தெலுங்கு திரையுலகில் பணியாற்றத் துவங்கியதும் அந்த மொழியை கற்கத் துவங்கிவிட்டேன்.

நான் ஒரு தென்னிந்திய நடிகை. நான் வடக்கில் இருந்து வந்ததாக மீடியாக்கள் சிலசமயம் கூறுவது வேதனையாக உள்ளது. நான் ஒரு தெலுங்கு அம்மாயி. தெலுங்கு பேசுபவர்களை எங்காவது பார்த்தால் உடனே நானும் தெலுங்கில் பேசுகிறேன்.

நாட்டில் நடக்கும் பலாத்காரங்களை மக்கள் மறந்துவிடுகிறார்கள். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது பற்றி அதிகம் பேசுவதற்கு காரணம் அதில் மசாலா இருக்கிறதே. இது ஆண் ஆதிக்கம் மிக்க உலகம். இயற்கையாகவே மனிதர்கள் சந்தர்ப்பவாதிகள்.

நான் 20 படங்களில் நடித்துவிட்டேன். இதுவரை யாரும் என்னை படுக்கைக்கு அழைக்கவில்லை. திறமை இருந்தால் மட்டுமே திரையுலகில் சாதிக்க முடியும். சில விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கிறேன். அது எப்படி என்று தெரியவில்லை. என்னை சுற்றி நல்லவர்களே உள்ளனர். நான் ரொம்ப அதிர்ஷ்டசாலி என்கிறார் ரகுல்.