நடிகர் விஜய் உடன் மல்லுக்கட்டும் வெங்கட்பிரபு

Actor Vijay Vs Director Venkat prabhu

தந்தைக்காக விஜய் உடன் மல்லுக்கட்டும் வெங்கட்பிரபு! ?

சினிமா பிரபலங்கள் அரசியல் பேசுவதை இப்போது வழக்கமாக செய்து கொண்டிருக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நடிகர்கள் எல்லாம் இப்போது அரசியல் பேசுகின்றனர்.

அதே போல தான் கமலும் தனது ட்விட்டர்ல் தனது கருத்துக்களை பேசி வருகிறார்.

சமீபத்தில் தீபாவளி அன்று வெளியான மெர்சல் படத்திலும் மத்திய அரசின் ஜிஎஸ்டி பற்றிய கருத்துக்கள் வெளியாகியது. இதனால் பல சர்ச்சைகளும் வந்தன.

இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபுவும் தனது தயாரிப்பில் உருவாகியுள்ள “ஆர்.கே நகர்” படத்தில் அரசை விமர்சிக்கும் வகையில் வசனத்தை அமைத்துள்ளார்.

அந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியானது. அதன் முதல் காட்சியிலேயே “தேர்தல் வந்த தான் உங்களுக்கு மக்கள் ஞாபகம் வரும்” என ஆளும் கட்சியை விமர்சிக்கும் வண்ணம் உள்ளது.

R K Nagar Trailer ADMK/விஜய் தான் விளம்பர தொடர்பு – னு நினைக்கிறேன் நீங்களே பார்த்துட்டு சொல்லுங்கள். – https://youtu.be/pPeAloVfqJY

அதே போல படத்தில் நடிகர் விஜய்யும் அவர்கள் கலாய்த்து உள்ளனர். விஜயின் கடைசி படமான மெர்சலில் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆருடன் ஒப்பிட்டு சில காட்சிகள் வரும்.

அதையும் இவர்கள் எம்.ஜி.ஆர் வேடத்தில் வந்தால் உங்களை முதலமைச்சர் ஆக்கி விடுவரர்களா என கிண்டல் செய்துள்ளனர்.

இதை அனைத்தையும் அவர்கள் ஏன் செய்தார்கள் என பார்க்கும் போது தனது தந்தையின் அரசியல் வாழ்க்கைக்காக செய்துள்ளனர் என தெரிகிறது.

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு ஆர்.கே நகரில் மறுதேர்தல் நடந்தது அதில் பா.ஜ சார்பாக வெங்கட் பிரபுவின் தந்தை கங்கை அமரன் போட்டியிட்டார்.

தன்னுடைய குடும்பத்தின் சுயநலத்திற்காக இப்படி செய்து விட்டாரே என நெட்டிசன்கள் அவரை கிண்டல் செய்து வருகின்றனர்.

ஆனால் அவர்கள் படத்தின் வசூலையும் தன் தந்தையின் அரசியலுக்கு உதவும் வகையில் தான் தந்திர வேலைகளை செய்துள்ளனர் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

You may also like...