விஜய் சாதனையை தகர்க்க முடியலையே… இந்த ரெக்கார்டை உடைக்குமா ‘காலா’?

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘காலா’ படத்தின் டீசர் நள்ளிரவு 12 மயயளவில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வமாக வெளியாவதற்கு முன்பாகவே இணையத்தில் லீக்கானது.
mersal-rajinikanth-vijay
அதனாலேயே இன்று காலை வெளியிடவிருந்த டீசர் முன்கூட்டியே ரிலீஸ் ஆனது. விஜய் நடிப்பில் வெளிவந்த ‘தெறி’, ‘பைரவா’, ‘மெர்சல்’ ஆகிய பட டீசர்களின் சாதனையை ரஜினியின் ‘காலா’ முறியடிக்கத் தவறிவிட்டது.

கபாலி படத்தைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. தனுஷ் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் டீசர் நள்ளிரவு வெளியானது. காலா டீசர், வெளியானது முதல் தற்போது வரையில் கிட்டத்தட்ட 5.2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளது. மேலும், 2 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் 32 ஆயிரம் பேர் டிஸ்லைக்ஸ்க்கும் கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும், இதற்கு முன்னதாக விஜய் நடிப்பில் வந்த ‘தெறி’, ‘பைரவா’ மற்றும் ‘மெர்சல்’ ஆகிய படங்களின் சாதனையை இப்படம் முறியடிக்க தவறிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு காரணம், லீக் ஆனதால் திடீரென டீசர் வெளியானது தான்.

விஜய் நடிப்பில் வெளிவந்து பிரமாண்ட வெற்றி பெற்ற ‘மெர்சல்’ படத்தின் டீசர் சுமார் 1 மில்லியன் லைக்ஸ் வரை பெற்றது. மேலும், ஒரே நாளில் இந்த டீசரை சுமார் 1 கோடி பேர் பார்த்தனர். இந்த சாதனையை காலா முறியடிக்கும் என பலரும் எதிர்ப்பார்த்து வருகின்றனர்.

ஆனால், ‘காலா’ டீசர் அதிகாரப்பூர்வமாக வெளிவருவதற்கு முன்பே லீக் ஆனது. அதனால் தான் அறிவித்த நேரத்திற்கு முன்கூட்டியே தனுஷ் டீசரை வெளியிட்டார். அதனால், டீசர் ஹிட்ஸுக்கு பாதிப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. ஆனால், நள்ளிரவில் வெளியிட்டதால் சில சாதனைகள் நிகழ்த்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

டீசர் வெளிவந்து 15 மணி நேரத்தில் 5.2 மில்லியன் ஹிட்ஸ் வந்துள்ளது. இன்னும் 9 மணி நேரத்தில் 4.8 மில்லியன் ஹிட்ஸ் வந்தால் மெர்சல் டீசர் சாதனை முறியடிக்கப்படும். விஜய்யின் சாதனையை சூப்பர்ஸ்டார் ரஜினி முறியடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.