கணவருடன் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்த நடிகை : ஷாக் ஆன திரையுலகம்

Bollywood actress bipasha basu act in condom ad

பாலிவுட் நடிகை பிபாஷா பாசு தன்னுடன் நடித்த கரண் சிங் குரோவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது பிபாஷாவுக்கும் சரி, கரணுக்கும் சரி மார்க்கெட் இல்லை.

கலை நிகழ்ச்சிகள், ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொண்டு வருகிறார்கள்.

பிபாஷாவும், கரண் சிங் குரோவரும் சேர்ந்து ஆணுறை விளம்பரத்தில் நடித்துள்ளனர். அந்த விளம்பரத்தை பார்த்த பாலிவுட்காரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்தியாவில் செக்ஸ் பற்றி பேசுவது தவறு. செக்ஸ் பற்றி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். அதனால் நான் ஆணுறை விளம்பரத்தில் நடித்ததில் தவறு இல்லை என்கிறார் பிபாஷா.

முன்னதாக நடிகை சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான ரன்வீர் சிங் ஆகியோர் ஆணுறை விளம்பரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட்டில் மவுசு இல்லை. அதனால் ஆணுறை விளம்பரத்தில் நடித்துவிட்டு விழிப்புணர்வு அது இது என்று பிபாஷா சமாளிக்கிறார் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள்.