17 பேருடன் களைகட்டியது பிக்பாஸ்-2 | #BiggBossTamil

விஜய் டிவியின் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் வில்லன் பொன்னம்பலம், நடிகை ஓவியா என 17 பேருடன் களை கட்டியிருக்கிறது வீடு.

யாசிகா ஆனந்த்


பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக யாஷிகா ஆனந்த் அறிமுகம் செய்யப்பட்டார். 18 வயது நிரம்பிய போட்டியாளர், சக போட்டியாளர்களை விட இளம் வயது போட்டியாளர் இவர்தான். துருவங்கள் 16, இருட்டு அறையில் முரட்டு குத்து படங்களில் நடித்தவர்.

பொன்னம்பலம்

அடுத்த போட்டியாளர் பொன்னம்பலம் ஆவார். இவர் தவசி, நாட்டாமை உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்தவர். இவரை கபாலி என்றும் அழைப்பர். வில்லத்தனத்திலும் சிறு காமெடியை செய்தவரும் இவர் தான். நாட்டாமையில் இவர் பேசிய ஏய் தாய் கிழவி என்ற வசனம்.

மகத்

பிக்பாஸ் வீட்டின் அடுத்த போட்டியாளர் மகத்.இவர் அஜித்வுடன் மங்காத்தா படத்தில் நடித்தவர். ஜில்லா படத்தில் விஜயின் தம்பியாக நடித்தவர்.

டேனியல்

#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் நான்காவது போட்டியாளர்! #டேனியல் #DanielAnniePope .இவர் பிரெண்ட் லவ் மேட்டர் என்ற வசனம் மூலம் புகழ்பெற்றார். காமெடியனாக அறிமுகமான இவர் பல்வேறு வேடங்களில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் இதற்குதான் ஆசைப்பட்டாய் படத்தில் நடித்தார்.

வைஷ்ணவி

பிக்பாஸ் வீட்டின் ஐந்தாவது போட்டியாளர் வைஷ்ணவி (Vaishnavi).சென்னையில் இருப்பவர்களுக்கு இவர் பெயர் கண்டிப்பாக தெரிந்திருக்கும். இவர் பெயர் மட்டுமே அந்த கடகட தமிழும் தெரிந்திருக்கும். நிறைய எழுத கூடிய இவர், எழுத்தாளர் சாவியின் பேத்தி என்பது கூடுதல் தகவல். பல திறமைகளுடன் இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனனி

ஆறாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் ஜனனி (Janani). சென்னையை சேர்ந்தவர். கோபாலபுரம் டிஏவியில் படித்தார். சவீதா பொறியியல் கல்லூரியில் என்ஜீனியரிங் படித்தார். இவர் அவன் இவன், தெகிடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆனந்த் வைத்தியநாதன்

பிக்பாஸ் சீசனில் 7-ஆவது போட்டியாளர் ஆனந்த் வைத்தியநாதன். கர்நாடக இசை பாடகர். இவர் சூப்பர் சிங்க்ஸ் நிகழ்ச்சியின் நடுவராக இருந்தார்.

ரம்யா

எட்டாவதாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர் ரம்யா #RamyaNSK .இவர் பாடகியாவார். பழம்பெரும் நடிகரும் நகைச்சுவை மன்னருமான என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நடிப்பிசை புலவர் கே.ஆர். ராமசாமி ஆகியோரது பேத்தியாவார்.


சென்றாயன்


பிக்பாஸ் சீசன் 2-வில் 9-ஆவது போட்டியாளர் சென்றாயன். இவர் வில்லன், காமெடி ரோலில் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் பைக் திருடும் ரோலில் நடித்துள்ளார்.

ரித்விகா

#பிக்பாஸ் வீட்டின் பத்தாவது போட்டியாளர்! #ரித்விகா #Riythvika .இவர் மெட்ராஸ் படத்தில் நடித்தவர். கபாலியில் ரஜினியை அப்பா அப்பா என்று அழைப்பார்.

மும்தாஜ்

#பிக்பாஸ் வீட்டிற்க்குள் நுழையும் பதினோறாவது போட்டியாளர்! #மும்தாஜ் #Mumtaz. இவரை டி. ராஜேந்தர் அறிமுகப்படுத்தினார். இவரது முதல் படம் மோனிஷா என் மோனாலிசா. தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக நடித்தவர்.

பாலாஜி

அடுத்ததாக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் போட்டியாளர் பாலாஜி #Bhalajie.இவர் கலக்க போவது யாரு நிகழ்ச்சியின் 3 நடுவர்களில் ஒருவர் இவர். இவருக்கு நித்யா என்ற மனைவியும், குழந்தையும் உள்ளனர். தன்னையும், தனது மகளையும் தாடி பாலாஜி உயிருடன் எரிக்க பார்த்தார் என புகார் கூறினார் நித்யா.

மமதி_சாரி

பதிமூன்றாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் #மமதி_சாரி #MamathiChari.இவர் விஜேவாக இருந்தார். வாணி ராணி தொடரில் வில்லியாக நடித்தார். மிக அழகான குரலுக்கு சொந்தக்காரர். பாடல்கள் பாடுவார்.

நித்யா

#பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் பதினான்காவது போட்டியாளர்! #நித்யா #Nithya.இவர் பெண்கள் மேம்பாட்டுக்கான அமைப்பை நடத்தி வருகிறார். இவர் தாடி பாலாஜியின் மனைவி. தாடி பாலாஜி குறித்து காவல் துறையில் புகார் குறித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் 12-ஆவது போட்டியாளராக தாடி பாலாஜியும் உள்ளார்.

சாரிக்_ஹாசன்

பிக்பாஸ் வீட்டின் பதினைந்தாவது போட்டியாளர்! #சாரிக்_ஹாசன் #ShariqHassan .பிக்பாஸ் வீட்டுக்கு 15-ஆவது போட்டியாளராக வந்தார் ஷாரிக் ஹாசன். இவர் கமலா காமேஷின் பேரன், ரியாஸ் கான்- உமா தம்பதியின் மகனாவார்.

ஐஸ்வர்யா_தத்தா

பதினாறாவது போட்டியாளராக #பிக்பாஸ் வீட்டிற்க்குள் வரும் #ஐஸ்வர்யா_தத்தா #AishwaryaDutta. இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்துள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர்.

ஓவியா
பிக்பாஸ் வீட்டுக்கு 17-ஆவது போட்டியாளராக மீண்டும் வந்துள்ளார் ஓவியா. இவர் சீசன் 1-இல் இருந்தார். ஆரவுடன் காதல் முறிந்ததால் மனவிரக்தியில் ஏதேதோ செய்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இவரது உண்மையான குணத்தை பார்த்த ரசிகர்கள் இவருக்கென ஆர்மியை தொடங்கியுள்ளனர்.