வாலிபரின் உதட்டில் முத்தமிட்ட பிரபல பாடகி

ppvHfஅமெரிக்க டிவி நிகழ்ச்சியில் பிரபல பாடகி கேட்டி பெர்ரி 19 வயது போட்டியாளருக்கு அவரின் அனுமதி இல்லாமல் உதட்டில் முத்தமிட்டது சர்ச்சையாகியுள்ளது. அமெரிக்கன் ஐடல் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பிரபல பாடகி கேட்டி பெர்ரி நடுவராக உள்ளார்.

மூன்று நடுவர்களில் ஒருவரான கேட்டி பெர்ரி செய்த காரியம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அமெரிக்கன் ஐடல் நிகழ்ச்சியில் பெஞ்சமின் கிளேஸ்(19) என்பவர் கலந்து கொண்டார். பாடகரான பெஞ்சமின் கிளேஸிடம் நடுவர்கள் கேள்வி கேட்டனர். அப்பொழுது ஒரு நடுவர் பெண்ணை முத்தமிட்டுள்ளீர்களா, உங்களுக்கு பிடித்திருந்ததா என்று கேட்டார். நான் யாரையும் காதலிக்கவில்லை. அதனால் இதுவரை யாரையும் முத்தமிடவில்லை. காதலிக்காமல் முத்தமிடுவது சரி அல்ல என நினைக்கிறேன் என்று பெஞ்சமின் பதில் அளித்தார்.

பெஞ்சமின் சொன்ன பதிலை கேட்டதும் கேட்டி பெர்ரி அவர் அருகில் வந்து தனது கன்னத்தில் முத்தமிடுமாறு கூறினார். பெஞ்சமின் வெட்கப்பட்டுக் கொண்டே வந்து கன்னத்தில் மெதுவாக முத்தம் கொடுத்தார். இதுவே ஒரு 33 வயது ஆண் நடுவர் 19 வயது பெண் போட்டியாளரின் அனுமதி இல்லாமல் உதட்டில் முத்தமிட்டால் இந்நேரம் பெரிய பிரச்சனையாக்கி இருப்பார்கள் என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.

You may also like...