‘லட்சுமி’ குறும்படக் குழுவின் அடுத்த வீடியோ ரிலீஸ்!

Lakshmi short film :என்னது மறுபடியும் மொதல்லருந்தா..?

மணிரத்னம் உதவி இயக்குநர் சர்ஜுன் இயக்கத்தில் வெளியான ‘லட்சுமி‘ குறும்படம் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

Lakshmi‘ short film controversy is still not complete, lyrical video on ‘Lakshmi – Nimirndha Nannadai’ is being released on ‘Ondraga Entertainment’ You-Tube channel.


இந்தக் குறும்படம் கௌதம் மேனனின் ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் சேனலில் வெளியாகியுள்ளது. இந்த ‘லட்சுமி’ படத்தில் லக்ஷ்மி ப்ரியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சமூக வலைதளங்களில் இந்தப் படத்தின் மீதான விமர்சனங்களால் அதிகமாக வைரலானது.

பெண்களின் வெளி, பாலியல் சுதந்திரம் ஆகியவை பற்றிப் பேசுவதாக எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படம் தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்ததால், அதிகமான பார்வைகளையும் பெற்றது.

‘லட்சுமி’ குறும்படத்தை இதுவரை 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். கடந்த வாரம், ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்கள் முழுக்க லட்சுமி படம் பற்றித்தான் பேச்சு ஓடிக்கொண்டிருந்தது.

‘லட்சுமி’ குறும்பட பரபரப்பே இன்னும் முழுமையாக நிறைவடையாத நிலையில், ‘லட்சுமி’ படக்குழுவின் சார்பில் இன்னொரு வீடியோ ‘ஒன்றாக என்டர்டெயின்மென்ட்’ யூ-ட்யூப் சேனலில் வெளியிடப்பட்டிருக்கிறது. பாரதியின் வரிகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இந்தப் பாடலும் பாரதி வரிகளில் உருவாகி இருக்கிறது.

You may also like...