மலையாள பாடலை பாடி அசத்திய தோனியின் செல்ல மகள் ஜிவா

தோனி களத்தில் ஹீரோ என்றால், சமூக வலைத்தளங்களில் ஹீரோ அவரது இரண்டரை வயது மகள் ஜிவா. தற்போது மீண்டும் ஒரு மலையாளப்பாடலை ஜிவா க்யூட்டாக பாடும் வீடியோதான் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட்.

1964-ஆம் ஆண்டு வெளியான ஓமனக்குட்டன் எனும் திரைப்படத்தில் வெளியாகும் ’கனிகாணும் நேரம்’ பாடலை தன் மழலை மொழியில் பாடி அசத்தியிருக்கிறார் ஜிவா.

#unwell n yet singing away #winterishere

A post shared by ZIVA SINGH DHONI (@zivasinghdhoni006) on

ஏற்கனவே அத்வைதம் எனும் படத்தில் வரும் ‘அம்பலப்புழா உன்னிக் கண்ணனோடு’ பாடலை உச்சரிப்பு சுத்தத்துடன் பாடியோ இன்ஸ்டகிராமில் வெளியாகியது. இதனால், ஜிவாவுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் பெருகினர். iதனால், வரும் ஜனவரி 14-ம் தேதி அம்பலப்புழா உண்ணிக்கிருஷ்ணன் கோவிலில் நடைபெற உள்ள 12 களபம் திருவிழாவின்போது, ஜிவாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்க திருவாங்கூர் சமஸ்தானம் முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts