விஜய் டிவியில் இருந்து வெளியேறினார் தொகுப்பாளர் ஜாக்குலின்?!

சில நாட்களுக்கு முன்னர் பிரபல விஜய்  டிவியில் ஒளிபரப்பான கலக்கபோவது யாரு நிகழ்ச்சியில் ஜாக்குலின் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட ஜான்விஜய்யுடன் இணைந்து டான்ஸ் ஆடினார்.

அப்போது அவரை தொட்டு ஆட தொடங்கியதால், ஜாக்குலின் நேரடியாக என்னை தொடாமல் ஆடுங்கள் என்றார்.

மேலும் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட மற்றொரு நிகழ்ச்சியிலும் அவரை இரட்டை அர்த்ததில் கலாய்தார் ஜெகன்.

தொடர்ந்து அவரை இவ்வாறு எல்லாம் கலாய்ப்பதால் தான் அவர் வெளியேறிவிட்டதாக கூறுகின்றனர்.

மேலும் சிலர், ஜாக்குலின் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டுவதால் தான் விஜய் டிவியை விட்டுவெளியேறியதாக கூறுகின்றனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் கூட அவர் தொகுத்து வழங்கிய கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தற்போது அவருக்கு பதிலாக சிவரஞ்சனி தொகுத்து வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பிரபல நடிகை நயன்தாரா அடுத்து நடித்து வரும் ஒரு படத்தில் ஜாக்லீனும் நடிக்கின்றார் என்பதால் அவர் அதில் பிசியாக இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply