பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் உள்ளது – வரலட்சுமி சரத்குமார் கவலை

வாய்ப்புக்காக படுக்கை: வரலட்சுமி சரத்குமார் கவலை

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் திரையுலகில் இன்னும் உள்ளது. அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார். கோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார் வரலட்சுமி சரத்குமார். விஷால், விஜய் படங்கள், பாம்பன், வெல்வெட் நகரம் என கை நிறைய படங்கள் வைத்துள்ளார். திரையுலகம் பற்றி வரலட்சுமி பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

ஸ்க்ரிப்ட் சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டும். என் கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்து கொண்ட பிறகே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்கிறேன்.
varalakshmi
அப்பாவுடன் நடிக்க வேண்டும் என்பதால் பாம்பன் பட வாய்ப்பை ஏற்றுக் கொண்டேன். ஏற்கனவே ஷூட்டிங் துவங்கிவிட்டது. இது தான் நாங்கள் முதல் முறையாக சேர்ந்து பணியாற்றுவது. அப்பாவுடன் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.

விஜய் 62 படத்தில் நடிக்கும் வாய்ப்பு என் பிறந்தநாள் அன்று கிடைத்தது. அதை விட சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது. விஜய் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அந்த ஆசை தற்போது நிறைவேறியுள்ளது.

ஆர்யா என் நல்ல நண்பர். எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. நான் இயக்குனர்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடிப்பதால் இதுவரை யாருடனும் பிரச்சனை வந்தது இல்லை.

பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்று நினைக்கிறேன். அந்த பழக்கத்தை ஒழிக்க வேண்டும். அது தான் நடிகைகளுக்கு பெரிய சவாலாக உள்ளது என்று வரலட்சுமி தெரிவித்துள்ளார்.