வந்தா சொருகிட வேண்டியது தான் : சன்னி லியோன் !

சமூக வலைதளத்தை பயன்படுத்துபவர் ஒருவர் மிரட்டியதை அடுத்து கத்தியுடன் வீட்டில் சுற்றியுள்ளார் நடிகை சன்னி லியோன்.

சமூக வலைதளங்கள் மூலம் தொல்லை கொடுப்பதற்கு எதிரான என்.ஜி.ஓ. ஒன்றுடன் கைகோர்த்துள்ளார் பாலிவுட் நடிகை சன்னி லியோன். இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

உன் வீட்டிற்கு வந்து உன்னை காயப்படுத்துவேன் என்று ஒருவர் எனக்கு சமூக வலைதளம் மூலமாக மிரட்டல் விடுத்தார். அப்போது என் கணவர் வெளிநாடு சென்றிருந்தார்.

மிரட்டல் விடுத்த நபர் வீட்டிற்கு வந்துவிடுவாரோ என்று பயந்தேன். வீட்டில் தனியாக இருந்ததால் பயமாக இருந்து. வெளியே ஏதோ சப்தம் கேட்பது போன்று இருக்கும். கையில் கத்தியுடன் வந்து கதவு அருகில் நின்றேன்.

சமூக வலைதள பயன்பாட்டாளர் ஒருவர் என் வீட்டிற்கே வந்து கதவை ஓங்கித் தட்டினார். அவரை ட்விட்டரில் ஃபாலோ செய்பவர்களும் என்னை மிரட்டினார்கள்.

மிரட்டல் சம்பவங்களை அடுத்து என் வீட்டிற்கு வெளியே கேமராக்கள் பொருத்தினோம். ஆன்லைனில் தொல்லைக்குள்ளாவதால் இளம் தலைமுறையினர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சிலர் தற்கொலை செய்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றார் சன்னி லியோன்.